Published : 16 Jul 2019 12:43 pm

Updated : 16 Jul 2019 12:45 pm

 

Published : 16 Jul 2019 12:43 PM
Last Updated : 16 Jul 2019 12:45 PM

ஆங்கிலம் அறிவோமே 273: முழுமையான உண்மை தெரியுமா?

know-the-absolute-truth

ஜி.எஸ்.எஸ். 

கேட்டாரே ஒரு கேள்வி


“You can't teach an old dog new tricks என்ற பழமொழி விலங்குகளுக்கானதா, மனிதர்களுக்கானதா?”
மனிதர்களுக்கானதுதான் வாசகரே. வெகு நாட்களாகச் சிலவகைப் பழக்கங்களில் ஊறிப்போனவர்களுக்கு அவற்றிலிருந்து வெளிவருவது மிகவும் கடினமான ஒன்று. அதைத்தான் இந்தப் பழமொழி குறிக்கிறது. 

“Who’s – Whose – குழப்பத்தை நீக்குங்களேன்”
 Who is என்பதன் சுருக்கம்தான் Who’s. 
 Whose என்றால் யாருடையது என்று பொருள். கீழே உள்ள வாக்கியங்களைக் கவனமாகப் படித்தால் இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு மேலும் விளங்கும். 
# Whose bags are these? 
# Who’s the hero in this film?
# don’t know whose car this is. 
# Who’s that at the door? 
# Whose cat is that?
சில நேரம் who’s என்பது who has என்பதைக் குறிக்கவும் பயன்படும். Who’s been eating my sandwich? 

“கணினிச் சுட்டியை mouse என்று எதற்காகக் குறிப்பிடுகிறோம்? சுண்டெலிக்கும் அதற்கும் என்ன தொடர்பு?”
நண்பரே, அந்தச் சுட்டியின் வடிவமும் அது கணினியுடன் இணைந்து கொள்வதற்கான நீண்ட வாலுமாக (wire) சேர்ந்து எலி போன்று தோற்றம் அளிப்பதால் அதற்கு mouse என்று பெயரிட்டனர். (இப்போது wireless mouse அறிமுகமாகிவிட்டது வேறு விஷயம்). 
தசையை உணர்த்தும் வார்த்தையான muscle என்பதுகூடச் சுண்டெலி தொடர்பானதுதான். லத்தீன் மொழியில் muscle என்றால் ‘சிறிய சுண்டெலி’ என்று பொருள். கைகளை மடக்கும்போது உருவாகும் தசைத் திரட்சி பார்ப்பதற்கு எலியைப் போல இருப்பதாகப் பண்டைக்கால ரோமானியர்களுக்குப் பட்டிருக்கிறது. அதனால்தான் இந்தப் பெயர். வாசகர் ஒருவர் புதிர் ஒன்றையும், அதற்கான விடையையும் அனுப்பியிருக்கிறார். If a farmer has five chickens, two horses and a wife, how many feet are on his farm?
இதற்கான விடை நான்கு என்பதுதான். விவசாயிக்கு இரண்டு கால்கள், அவர் மனைவிக்கு இரண்டு கால்கள். (அதாவது Chicken, Horse ஆகியவற்றுக்கான ‘பாதங்களை’ முறையே claws, hoofs என்று குறிப்பிடுவோம்).
இந்தப் புதிரை அப்படியே முழுமையாகத் தமிழ்ப்படுத்தினால் அந்த விடையை ரசிக்க முடியாது. இப்படி ஆங்கிலத்தில் மட்டுமே ரசிக்கக்கூடிய (முழுமையாகத் தமிழில் மொழியாக்கம் செய்ய முடியாத) நான் படித்த வேறு சில புதிர்களும் எனக்குத் தோன்றின. 
Paul’s height is six feet, he’s an assistant at a butcher’s shop, and wears size 9 shoes. What does he weigh? 
Answer: Meat
He has married many women, but has never been married. Who is he? 
Answer: A priest
What is black and white and red all over?
Answer: A newspaper

சிப்ஸ்

 * The mother cleaned the child’s tears என்பது சரியா அல்லது cleared the child’s tears என்பது சரியா?
    The mother wiped the child’s tears என்பதே சரி.

* Naked truth என்றால்?
    முழுமையான உண்மை

* Wit என்றால் புத்திசாலித்தனம் என்று குறிப்பிட்டீர்கள். Half wit என்றால் என்ன?
    முட்டாள்

(தொடர்புக்கு: - 
aruncharanya@gmail.com)

ஆங்கிலம் அறிவோமேகணினிச் சுட்டிMouse

You May Like

More From This Category

More From this Author