

உலகப் பொருளாதார நிறுவனத்தின் 2015- ம் ஆண்டுக்கான ‘மனித மூலதனம் தொடர்பான அறிக்கை’ கல்வித்துறையின் பாடத்திட்டத்துக்கும் நிறுவனங்களின் தேவைகளுக்குமான பொருத்தமின்மையை பிரதானமாக எடுத்துக்காட்டு கிறது. பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களால் மாறிக்கொண்டிருக்கிற தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்றமுறையில் தயாராக உள்ள பட்டதாரிகளை அவை உருவாக்கவில்லை.
அது மட்டுமல்ல, ஐ.டி. நிறுவனங்கள் தங்களின் பணிகளை மேலும் தானியங்கி மயமாக்குவதால் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டு, இடைநிலை மேலாளர்களாக இருக்கிறவர்கள் பொதுவாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஆட்குறைப்பு செய்யும் நிறுவனங்களின் முதல் குறி இவர்கள்தான்.
ஐ.டி.துறை மட்டுமல்லாமல் வேறு துறைகளிலும் இத்தகைய போக்குதான். தங்களின் திறன்களை மேலும் மேலும் வளர்த்துக்கொள்பவர்கள்தான் தங்களின் தொழில் வாழ்க்கையைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
24 வயதுக்குட்பட்ட 36 கோடிப்பேர்களுக்கும் மேற்பட்டோர் வேலை செய்யும் சக்தியுடன் உள்ளனர். அவர்களின் திறன் வளர்ப்புக்கான ஒரு தேசியக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 2022 ம் ஆண்டுக்குள் 50 கோடிக்கும் மேற்பட்டோருக்குத் திறன் வளர்ப்பு பயிற்சி அளிப்பது இதன் நோக்கம்.