Published : 28 Apr 2015 01:21 PM
Last Updated : 28 Apr 2015 01:21 PM

அறிவியல் உயர்படிப்புகளுக்கான ஐசர் நிறுவனங்கள்

அறிவியல் உயர் படிப்புகளை வழங்குவதற்காக, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் (IISER) என்ற பெயரில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

போபால், கொல்கத்தா, பஞ்சாபில் உள்ள மொஹாலி, புனே, திருவனந்தபுரம், திருப்பதி ஆகிய இடங்களில் இவை செயல்படுகின்றன.

இங்கு ஒருங்கிணைந்த பி.எஸ்.-எம்.எஸ் (BS-MS Dual Degree) ஐந்தாண்டுப் பட்டப்படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் கிடைக்கும். மாதம் 5 ஆயிரம் முதல், வருடம் 20 ஆயிரம் வரை உதவிகள் கிடைக்கும்.

உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில் முனைவர் ஆராய்ச்சிப்படிப்பு வரை இங்கே படிக்கலாம். மொத்தம் 750 இடங்கள் உள்ளன.

ஜூன் முதல் ஜூலை வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு: >http://www.iiseradmission.in/

ஒருங்கிணைந்த பி.எச்டி படிப்பில் சேர விரும்புவோர் பி.எஸ்.சி படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெறவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x