

தமிழகத்தில் பீங்கான் தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான பட்டப்படிப்பை வழங்க ஒரு கல்லூரி இருக்கிறது. அது கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் நகரில் உள்ளது.
விருத்தாசலம்- ஆலடி சாலையில் இந்தக் கல்லூரி இருக்கிறது.
இதில் வெளியூர் மாணவர்கள் தங்கிப்படிப்பதற்கான விடுதியும் இருக்கிறது.
10 ஆம் வகுப்பில் தேறியவராக இருந்தாலும், பிளஸ் 2 தேர்வில் தேறியவராக இருந்தாலும், இந்தப் பட்டப்படிப்பில் சேரமுடியும். 10 ஆம் வகுப்பு தேறியவர் மூன்று ஆண்டுகள் படிக்க வேண்டும்.
ஆறு மாதம் களப்பயிற்சியும் வழங்கப்படும். பிளஸ் 2 தேறியவர் இரண்டு ஆண்டுகாலம் பயின்றால் போதும்.அவருக்கும் ஆறுமாத காலம் களப்பயிற்சி உண்டு.