Published : 27 Apr 2015 10:45 AM
Last Updated : 27 Apr 2015 10:45 AM

துணிவே தொழில்: இலக்கை எட்ட எது தேவை?

ஒரு வெற்றியாளராக உருவாக நமக்கு லட்சியமும் இலக்கும் இருந்தால் போதுமா? இவை இருந்தாலே வெற்றி வசப்படுமா என்று கேட்போர் பலர் உண்டு. இவை இரண்டும் இருப்போருக்கு அடுத்த கட்ட தேவைதான் திட்டமிடுதல். எந்த ஒரு வேலையையும் திட்டமிடுவது முக்கியம். அதேபோல தொழில் தொடங்குவோருக்கு திட்டமிடுதல் மிக மிக அவசியம்.

திட்டமிடுதல் என்றால் என்ன? ஒரு பணியை நிறைவேற்ற வேண்டும் என்றால் நமக்கு அதற்குரிய ஆள் பலமும், இலக்கை எட்டுவதற்கான கால அவகாசமும் தேவைப்படும்.

உதாரணத்துக்கு நீங்கள் தொழில் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நிறுவனத்தின் ஆண்டு வருமா னம் ரூ. 50 லட்சம் என வைத்துக் கொள் வோம். நடப்பு நிதிஆண்டில் உங்கள் நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். அதையே இலக்கா கவும் வைக்கிறீர்கள். ஆனால் இலக்கை வைத்தால் மட்டும் போதாது.

நீங்கள் நிர்ணயித்த காலம் ஓராண்டு. வருமானத்தை 10 மடங்கு அதிகரிக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும். இத்தகைய இலக்கை எட்டுவதற்கு Smart Goal என்பர். ஸ்மார்ட் என்றால் என்ன தெரியுமா? S for specific, M for Measurable, A for Achievable, R for Realistic and T for Time bound.

நீங்கள் நிர்ணயித்த காலம் ஓராண்டு. வருமானத்தை 10 மடங்கு அதிகரிக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும். இத்தகைய இலக்கை எட்டுவதற்கு Smart Goal என்பர். ஸ்மார்ட் என்றால் என்ன தெரியுமா? S for specific, M for Measurable, A for Achievable, R for Realistic and T for Time bound.

மேலாண்மைக் கல்வி மையங்களில் பெரும்பாலும் ஸ்மார்ட் கோல் என்பதைத் தான் பெரிதும் சொல்லித் தருவார்கள்.

இதன்படி 10 மடங்கு வருமானம் ஈட்ட வேண்டும் என தெளிவாக முடிவு செய்துள்ளது specific ஆகும். அடுத்தது measurable என்பது எவ்வளவு காலத்தில் அதை அடைவது என்பதை தீர்மானிப் பதாகும். சென்னையிலிருந்து கோவைக்கு 10 மணி நேர ரயில் பயணம் என்றால் அந்த ரயில் சரியான வேகத்தில் எவ்வித இடையூறுமின்றி (கிராசிங்) இல்லாமல், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நிற்க வேண்டிய நேரத்தில் நின்று, புறப்பட வேண்டிய சமயத்தில் சரியாக புறப்பட்டுச் சென்றால் மட்டுமே 10 மணி நேரத்தில் கோவையைச் சென்றடையும். அதைப் போல இலக்கை எட்டுவதற்கு எத்தனை காலம் ஆகும், அதை எவ்விதம் அடையலாம் என்பதை அளவீடு செய்ய வேண்டும்.

நிறுவனங்களின் வளர்ச்சியை ஒவ் வொரு காலாண்டிலும் மதிப்பீடு செய்வர். அதன்படி முதல் காலாண்டில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கான வளர்ச்சி, அடுத்த காலாண்டு, மூன்றாம் காலாண்டு மற்றும் நான்காம் காலாண்டில் இலக்கை எட்டுவது என தீர்மானித்து செயல்பட வேண்டும்.

நிறுவனங்களின் வளர்ச்சியை அளவீடு செய்வதன் மூலம் குறிக்கோள் மற்றும் இலக்கை எட்ட முடியுமா? என்பதைப் பார்க்கலாம். இவ்விதம் அளவீடு செய்யா விடில் இலக்கை எட்டுவது சாத்தியமாகாது.

உதாரணத்துக்கு நீங்கள் நடத்தும் தொழில் அனைத்து காலத்துக்கும் ஏற்றதா அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமானதா அதாவது சீசனல் தொழிலா என்று பார்க்க வேண்டும். நீங்கள் குடை வியாபாரம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மழைக் காலத்தில் குடை வியாபாரம் அமோகமாக இருக்கும். கோடைக் காலத்தில் சற்று பரவாயில்லை போலிருக்கும்.

எஞ்சிய காலங்களில் வர்த்தகம் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. அப்படியெனில் எந்த காலகட்டத்தில் உங்கள் இலக்கு அதிகமாக இருக்க வேண்டும் என நிர்ணயிக்க வேண்டும். மழைக் காலத்தில் மட்டும் இப்போது ரூ. 50 லட்சம் உள்ள வர்த்தகத்தை ரூ. 5 கோடியாக உயர்த்த முடியுமா? என்று பார்க்க வேண்டும்.

அடுத்தது Achievable, அதாவது நீங்கள் நிர்ணயித்த இலக்கு எட்டக் கூடியதுதானா? என்று ஒரு முறைக்கு பல தடவை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ரூ. 50 லட்சமாக உள்ள உங்கள் வருமானம் 10 மடங்கு உயர வேண்டுமெனில் ஓராண்டில் உங்கள் வருமானம் ரூ. 5 கோடியாக உயர வேண்டும். இந்த அளவுக்கு உங்கள் தொழிலின் வர்த்தக வாய்ப்பு உள்ளதா? இப்போதைய சூழலில் இது சாத்தியமா என்று ஆராய வேண்டும்.

உங்களது தொழில் எல்லை சென்னை மற்றும் அதைச் சுற்றித்தான் உள்ளது. புதிய இலக்கை எட்ட வேண்டுமெனில் மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். Realistic இதுதான் நடைமுறை சாத்தியம். நிர்ணயித்துள்ள இலக்கை எட்ட தற்போது நம்மிடம் உள்ள 10 ஊழியர்களின் துணையோடு எட்ட முடியுமா? என்று ஆராய வேண்டும். அடுத்தது timebound அதாவது கால வரையறைக்குட்பட்டது. 12 மாதத்திற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டும் என நிர்ணயிப்பதுதான் அது. இலக்கை எட்டும் சிறிய மைல் கல்லாக இருப்பதுதான் Smart.

இத்தகைய இலக்கை நிர்ணயிப்பதே Goal Setting. இதை எவ்விதம் நிர்ணயிப்பது என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம்.

aspireswaminathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x