Published : 28 Apr 2015 01:05 PM
Last Updated : 28 Apr 2015 01:05 PM

பொதுவான தமிழ் எழுத்துரு தேடி..

தஞ்சாவூர் மாவட்டத்தில் கச்சமங்கலம் என்னும் சிற்றூரில் பிரபாகரன் என்பவர் கலிபோர்னியாவில் வசிக்கும் நண்பருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மின்னஞ்சலை அனுப்பினார். அந்த மின்னஞ்சல் ஒருவகை உள்ளூர் எழுத்துருவில் (எடுத்துக்காட்டு: இளங்கோ, கம்பன்) தட்டச்சு செய்யப்பட்டது.

இந்த எழுத்துரு கலிபோர்னிய நண்பரின் கணினியில் இல்லை. எனவே, அவரால் அதைப் படிக்க முடியவில்லை. தஞ்சை நண்பர் பயன்படுத்திய எழுத்துருவை மின்னஞ்சல் வழியாக அவர் அனுப்பவும் இல்லை.

ஒருவர் பயன்படுத்தும் எழுத்துரு மற்றவருக்குப் பொருந்தாமல் போகிற நிலையை மாற்ற என்ன செய்யலாம் என அவர்கள் சிந்தித்தனர். உலகத்துக்கெல்லாம் பொதுவான தமிழ் எழுத்துருவை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் முடிவுக்கு வருகின்றனர். இதற்காக தமிழ் ஒருங்குறி எழுத்துருவை (Unicode Font) உருவாக்குகின்றனர்.

இந்த ஒருங்குறி எழுத்துரு வந்த பின்பு உலகம் முழுவதும் தமிழுக்கான எழுத்துரு பிரச்சினை ஓரளவு தீர்ந்தது. இனிமேல் எழுத்துருவையும் சேர்த்து மின்னஞ்சல் அனுப்ப வேண்டியதில்லை. ஆனால் இன்றுவரையும் ஒருங்குறி அல்லாத நூற்றுக்கணக்கான எழுத்துருக்கள் தமிழில் உள்ளன. அவற்றை எல்லாம் ஒருங்குறிக்கு மாற்றி வாசிக்க வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டபோது எழுத்துரு மாற்றிகளை உருவாக்க வேண்டிய நிலை வந்தது.

எழுத்துருமாற்றிகள்

இன்று இணையத்தில் எண்ணற்ற எழுத்துரு மாற்றிகள் இலவசமாக இயங்குகின்றன.

பொங்கு தமிழ் எழுத்துரு

‘சுரதா யாழ்வாணன் என்பவர் எந்த எழுத்துருவையும் ஒருங்குறி எழுத்துருவுக்கு (Unicode Font) மாற்றிவிடப் புதிய மென்பொருளை கண்டுபிடித்தார். பொங்கு தமிழ்எழுத்துரு மாற்றியில் 19-எழுத்துரு மாற்றிகள் செயல்முறையில் உள்ளன. இவை அனைத்தும் ஒருங்குறி எழுத்துருவுக்கு மாற்றிவிடும் வாய்ப்புடையவை.

இதைத் தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் இணைய இணைப்பின்றிச் சாதாரணமான நிலையிலும் இயங்கும்படி உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு. ( >http://www.suratha.com/reader.htm)

அதியமான் எழுத்துரு மாற்றி

பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியைப் போன்று அதியமான் எழுத்துரு மாற்றியும் இலவசமாக இணையத்தில் செயல்பட்டு வருகிறது. ( >http://www.higopi.com/adhiyaman/) இந்த எழுத்துருவைஉருவாக்கியவர் கோபி.

தமிழ் எழுத்துரு மாற்றி

தமிழ் எழுத்துரு மாற்றியும் பொங்கு தமிழ், அதியமான் போன்றதே. இதன் மூலம் திஸ்கி, டாம், ரொமைனஸ்டு, அஞ்சல், மயிலை, முரசொலி, தினத்தந்தி பாமினி, டாம்,பூமி, தினகரன், நக்கீரன், தினமணி என்ற பதிமூன்று எழுத்துருக்களையும்ஒருங்குறியில் மாற்றிக்கொள்ள முடியும். ( >http://kandupidi.com/converter/)

சிலம்பம் தமிழ் எழுத்துரு மாற்றி

ஒருங்குறி முறையில் எழுத்துருவை மாற்றிக்கொடுக்கும் செயலியாகும். இந்த எழுத்துரு மாற்றி பாமினி, தமிங்கிலிஸ் ஆகிய எழுத்துருக்களை ஒருங்குறி எழுத்துருக்களாக மாற்றிக் கொடுக்கிறது. ( >http://www.sillampum.com/tamil-unicode-converter.html)

இஸ்லாம் கல்வி எழுத்துரு மாற்றி

பாமினி,சாருகேசி, ரோஜா, சரஸ்வதி, தென்றல், அருவி, ஃபிரதவ்ஸ், ஜாஸ்மின், சிங்கார என்னும் எழுத்துருக்களைப்போன்ற பல்வேறு எழுத்துருக்களில் எழுதப்பட்டகட்டுரைகளை ஒருங்குறிக்கு மாற்றும் செயலி. இந்த எழுத்துரு மாற்றி சுரதாவைமுன்னோடியாகக் கொண்டே இயங்கிவருகிறது. ( >http://www.islamkalvi.com/web/bamini2unicode_converter.htm)

என்.எச்.எம் எழுத்துரு மாற்றி

பத்ரி சேஷாத்திரியால் தொடங்கப்பட்ட நியூ ஹாரிசன் மீடியா பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் வாயிலாக நாகராஜன் எனும் மென்பொருள் உருவாக்குநரால் உருவாக்கப்பட்ட எழுத்துரு மாற்றி வழியாகத் தமிழ் உட்பட சில இந்திய மொழிகளிலும் இயங்கும் ஒரு மென்பொருளாகும். இதை இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். ( >http://software.nhm.in/products/converter)

மற்ற எழுத்துரு மாற்றிகள் பிற எழுத்துருக்களிலிருந்து ஒருங்குறிக்கு மாற்றம் செய்ய உதவுகின்றன. ஆனால் இந்த எழுத்துரு மாற்றி ஒருங்குறியிலிருந்து பிற எழுத்துருக்களுக்கு மாற்றம் செய்து கொள்ளவும் உதவுகிறது.

எழுதி மாற்றி>http://www.tamillexicon.com/uc/bamini-unicode

அழகி எழுத்துரு மாற்றி ( >>http://www.azhagi.com)

இலங்கை பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட மாற்றி ( >>http://www.ucsc.cmb.ac.lk/ltrl/services/feconverter/?maps=t_b-u.xml)

ஆகியவற்றை மேற்கண்ட சுட்டிகளில் பெறலாம். கைவசம் இந்த எழுத்துரு மாற்றிகள் இருந்தால் போதும். பழைய தமிழ் எழுத்துருக்களைக் கொண்ட தளங்கள் எதையும் நாம் படித்து விடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x