Published : 17 Mar 2015 12:17 PM
Last Updated : 17 Mar 2015 12:17 PM

வாழ்வை வளமாக்கும் மேலாண்மை விதிகள்

வாசகர் பக்கம்

மேலாண்மைக் கல்வியில் சில முக்கியமான கோட்பாடுகள் இருக்கின்றன.

பரேடோ விதி

பரேடோ விதி (Pareto Principle ) . இதனை 80-20 விதி என்றும் கூறுவார்கள். வில்ப்ரடோ பரேடோ என்பவர் வகுத்த விதி இது. அதாவது, ஒரு நிறுவனத்தின் 80 சதவீத நஷ்டங்கள், 20 சதவீத கவனிப்பின்மையால் வருவது என்பது அதன் தத்துவம்.

எஸ்பிரிட்டி கார்ப்ஸ் விதி

ஒற்றுமையே உயர்வுக்கு வழி என்பது பொருள் . அலுவலகம் மற்றும் அல்லாது, பொது வாழ்க்கையிலும், குடும்பத்திலும் ஒற்றுமையாக அனைவரையும் சமமாக பாவித்தால் உயர்வு உண்டு என்கிறது.

ஹாலோ விளைவு விதி

ஹாலோ விளைவு (Halo Effect ) - ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து அவரை நிர்ணயம் செய்யக்கூடாது என்கிறது . வெளித்தோற்றத்தை வைத்து அவர் நல்லவரில்லை என்றோ, நம்பிவிடுவதோ தவறு. தீர ஆராய்ந்த பின்பே முடிவு செய்ய வேண்டும். மனித வள மேம்பாட்டுத்துறையில் ஒருவரை நேர்முகம் காண இது உதவும். வெளித்தோற்றம் என்பது ஒரு மாய பிம்பமே என்கிறது.

பட்டர்பிளை விதி

பட்டர்பிளை விதி (Butterfly Effect) இன்று நாம் செய்யும் சிறு காரியங்கள் மூலம் ஏற்படும் மாற்றங்கள் பின்னாளில் , பெரிய விளைவை உண்டாக்கும் என்கிறது. அமெரிக்காவில் பட்டாம்பூச்சி பறப்பதை வைத்து, அதன் இறகுகள் காற்றில் செலுத்தும் மின் காந்த அலைகளை வைத்து பின்னாளில் வானிலையில் ஏற்படுத்தும் மாற்றங்களை கண்டுபிடிப்பதால் இந்த பெயர் வந்ததாம்.

- தொகுப்பு: எம். விக்னேஷ், மதுரை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x