Published : 29 Mar 2015 01:13 PM
Last Updated : 29 Mar 2015 01:13 PM

குறிப்புகள் பலவிதம்: வெயிலால் தலைவலியா?

* சோம்பு, சீரகம் இரண்டையும் முதல் நாள் இரவு கொதிக்க வைத்து, அதை மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடித்தால் வாயுத்தொல்லை, இரைப்பை அமிலத் தன்மை நீங்கும்.

* தினம் 1 டம்ளர் பெருநெல்லிச்சாறுடன் (3 நெல்லிக்காய்) கல் உப்பு சேர்த்துக் குடித்தால் தோல் மெருகேறும். கூந்தல் வலுப்பெறும். எதிர்ப்பு சக்தி கூடும்.

* வெயிலில் வெளியே போய் வரும்போது சிலருக்குத் தலைவலி வரலாம். காலையில் முள்ளங்கிச் சாறு, எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குடித்துவிட்டுச் சென்றால் தலைவலியே வராது.

* பல் ஈறு வீங்கி வலித்தால் சிறிதளவு படிகாரத்தைத் தூள் செய்து, வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வலி மறைந்துவிடும்.

* சிறிது பார்லிப் பொடி, எலுமிச்சைச் சாறு, பால் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி, காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் வெயில் தாக்கத்தால் ஏற்பட்ட கருமை நிறம் மாறிவிடும்.

* வீட்டிலுள்ள எவர்சில்வர் குழாய்களில் உப்பு படிந்து மங்கலாக இருந்தால் இரண்டு டீஸ்பூன் விபூதியும், சம அளவு உப்புத் தூளும் கலந்து ஒரு ஈரமான ஸ்பான்ஞ் அல்லது துணியால் குழாயின் மேல் அழுத்தித் தேய்த்து கழுவிவிட்டால் பளிச்சென்று ஆகிவிடும்.

- சாந்தினி, அடையாறு, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x