

தன்னம்பிக்கை தரும் நூல்
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் முதல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வரை பல்வேறு அறிஞர்கள் ராமகிருஷ்ண மடம் நடத்துகிற ராமகிருஷ்ண விஜயம் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. வெற்றிப் பாதைகளை இளைஞர் சமூகத்துக்குக் காட்டும் இவை வெளிப்புறச் சாதனைகளுக்கு அடிப்படையாக உள்ள அகச்சாதனைகளைப்பற்றியும் பேசுகின்றன.
எழுச்சி பெறு யுவனே!
தொகுப்பாசிரியர் - சுவாமி விமூர்த்தானந்தர்
வெளியீடு- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,
மயிலாப்பூர், சென்னை- 600 004
தொடர்புக்கு-mail@chennaimath.org
தேர்வு வழிகாட்டி
மாணவர்கள் போட்டித்தேர்வு வினாக்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவும், வினாக்களுக்கு விடையளிக்கும் உத்தியைப் பயிலவும், வினாக்களின் வகையறிந்து விடையளிக்கவும் இந்த நூல் உதவுகிறது. போட்டித் தேர்வுகளின் வழிகாட்டி.
பொது அறிவுக் களஞ்சியம்,
ஆசிரியர் – வெற்றி வெளியீடு- AKS புக்ஸ் வேர்ல்டு,
08, ஸ்ரீனிவாசன் தெரு, தி.நகர், சென்னை- 600 017.
தொடர்புக்கு-9444005291.
வேலை,கல்விக்கான தகவல் களஞ்சியம்
+2 படித்தபிறகு எந்தப் படிப்புகளை எங்கே படிக்கலாம்? அதற்கான வழிமுறைகள் என்ன, என்ன? என வழிகாட்டக்கூடிய நூல். என்ன படிப்பு முடித்திருந்தால் என்ன வேலை கிடைக்கும்? எந்த வேலைக்கு முயலலாம்? என்ற முறையிலும் முழுமையான வழிகாட்டலுக்கு முயன்றுள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பு மலர்,
வெளியீடு- தேசிய வேலைவாய்ப்பு தகவல் மையம்,
ராசிபுரம், நாமக்கல் - 637 408,
தொடர்புக்கு-9843920500.