Published : 16 Apr 2014 12:00 PM
Last Updated : 16 Apr 2014 12:00 PM

அந்த நாள் ஞாபகம் - லூசியானா அரசியல் சாசனத்துக்கான வாக்கெடுப்பு

1868, ஏப்ரல் 16

அமெரிக்க மாநிலங்கள் தனி நாடுகளை போல தனக்கான தனித்தனி அரசியல் சாசனங்களை வைத்து உள்ளன.

லூசியானா அமெரிக்காவின் 50 மாநிலங்களில் ஒன்று.1812 ஏப்ரல் 30ல் அது அமெரிக்காவின் மாநிலமாக மாறியது. அதன் மக்கள் தங்களுக்கான அரசியல் சாசனத்தை பல முறை உருவாக்கினார்கள். 1868- ல் உரு வாக்கப்பட்ட அரசியல் சாசனம் வாக்கெடுப்புக்கு விடப் பட்ட நாள் இன்று.

பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்த 8லட்சத்து 28 ஆயிரம் சதுரகிலோ மீட்டர் பரப்பளவு உள்ள லூசியானாவை அமெரிக்கா 1803ல் ஒன்னரைக் கோடி டாலர்களை கொடுத்து வாங்கியது. தற்போது லூசியா னாவில் 46 லட்சம் பேர் வாழ் கின்றனர். மக்கள் தொகையில் அது அமெரிக்க மாநிலங்களில் 25 வது இடத்தில் உள்ளது. 1812ல் அதற்கு முதல் அரசியல்சாசனம் தயாரிக்கப்பட்டது.அதற்கு பிறகு 10 முறை அரசியல்சாசனங்கள் அதற்கு தயாரிக்கப்பட்டன.தற்போது 1974 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியல் சாசனம் நடைமுறையில் உள்ளது.

ஆறாவது அரசியல்சாசனத்துக்கு மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடந்த நாள் இன்று. தேந்தெடுக்கப்பட்ட அந்த அரசியல் சாசனம் தான் முதலில் மக்களுக்கான உரிமை களை பற்றி பேசியது. சொத்து உள்ளவர்கள்தான் அரசின் பதவிகளில் இருக்க முடியும் என்ற தடைகளை அகற்றியது. கருப்பினமக்களுக்கு முக்கிய மான அரசியல் உரிமை களை வழங்கியது. அந்த வகையில் அதன் அரசியல் சாசனங் களின் வரலாற்றில் அது முக்கிய மானதாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x