Published : 17 Feb 2015 12:28 pm

Updated : 17 Feb 2015 12:28 pm

 

Published : 17 Feb 2015 12:28 PM
Last Updated : 17 Feb 2015 12:28 PM

காக்கைக் கூட்டத்துக்கும் குற்றத்துக்கும் என்ன சம்பந்தம்?

ஒரு வாசகர் Ambush என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டிருக்கிறார். எதிர்பாராத வகையில் (அல்லது எதிர்பாராத நேரத்தில்) தாக்குவதைத்தான் ambush என்பார்கள்.

புலிகள் கூட்டத்தையும்கூட ambush என்பார்கள். (பொதுவாகப் புலிகள் தனிமையைத்தான் விரும்பும் என்பது வேறு விஷயம்).


சிங்கக் கூட்டத்தை Pride என்று அழைப்பார்கள். வெளவால்களின் கூட்டம்? Colony.

எருது மற்றும் எருமைகளின் கூட்டத்தை gang என்பார்கள். ஆந்தைகள் கூட்டமாக இருக்கும்போது அதை எப்படி அழைப்பார்கள் என்பதை அறிந்தால் வியப்போடு கொஞ்சம் புன்னகையும் வெளிப்படும். காக்கைகள் கூட்டத்தைக் குறிப்பிடும் ஒரு வார்த்தைக்கும் இந்திய கிரிமினல் சட்டத்துக்கும் தொடர்பு உண்டு.

இப்போது கொஞ்சம் இலக்கணம் பக்கமாக எட்டிப் பார்ப்போமா?

ஒரு noun-க்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைதான் pronoun. Rajaraja Chola was a great King. Rajaraja Chola built the Big Temple at Tanjore. It is a great wonder that Rajaraja Chola built this mammoth temple at a place where suitable stones were not available.

ராஜராஜ சோழன் ஒரு சிறந்த மன்னராக இருக்கலாம். ஆனால் அவரின் பெயரை வாக்கியத்துக்கு வாக்கியம் எழுதும்போது பெருமையுடன் சலிப்பும் உண்டாவது இயற்கை. எனவேதான் முதல்முறை மன்னரின் பெயரைக் குறிப்பிட்டுவிட்டு அதன் பிறகு ‘He’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். Rajaraja Chola was a great King. He build the Big Temple at Tanjore. It is a great wonder that he built this mammoth temple at a place where suitable stones were not available.

I, you, he, she, it, they, we ஆகியவையெல்லாம் pronounsதான். இவை வேறு வடிவங்களாக முறையே me, you, him, her, it, them, us என்றும் அர்த்தத்தைப் பொருத்து அமையலாம். Ram helped me by lending his pen to me. I thanked him for that.

மேலே குறிப்பிட்டவை personal pronouns.

Relative pronouns என்பதும் உண்டு. Who, whom, whose, what, which, that போன்றவை இந்த வகை.

The lady who served you the food is my sister. (The lady is my sister. The lady served you the food. இப்படி இரு வாக்கியங்களை who என்ற வார்த்தை இங்கே தவிர்க்கிறது). இதேபோல் இன்னும் சில வாக்கியங்கள். I saw the tiger which attacked him. We did not know the tune that had been played.

இவற்றில் உள்ள who, which, that ஆகியவை relative pronouns. இவற்றில் who அல்லது whom என்பது நபர்களையும், which என்பது உயிரற்ற பொருள்களையும் குறிக்கப் பயன்படுகிறது. That என்ற வார்த்தை இந்த இரண்டு பிரிவினரையும் குறிக்கப் பயன்படும்.

This, that ஆகிய வார்த்தைகள் ஒருமையில் உள்ள பெயர் சொற்களுக்குப் பதிலாக இடம் பெறக் கூடும். பன்மையில் அமைந்த பெயர்ச்சொற்கள் என்றால் these, those ஆகிய வார்த்தைகள் அவற்றுக்கான pronouns ஆக அமையும். This, that, these, those ஆகியவற்றை demonstrative pronouns என்பார்கள்.

None, everyone, several, each other, one another, itself, himself போன்றவைகூட pronouns ஆகப் பயன்படக் கூடியவைதான். This novel is something that everyone would like to read. இந்த வாக்கியத்தில் something, everyone ஆகியவை pronounsதான். (இந்த இடத்தில் மார்க் ட்வைன் என்ற பிரபல எழுத்தாளர் அளித்த கிண்டல் நினைவுக்கு வருகிறது. “A classic is something that everybody wants to have read and nobody wants to read”.)

Parliament என்றால் என்ன என்று கேட்டால் சட்டென்று நாடாளுமன்றம் என்பீர்கள். ஆந்தைக் கூட்டத்தைக் குறிக்கவும் அதே வார்த்தைதான். காக்கைக் கூட்டத்தை murder என்பார்கள்.

BYPASS

Bypass என்றால் தோராயமாகப் புறவழி என்று சொல்லலாம். வெளி ஊர்களுக்குப் பேருந்தில் செல்லும்போது Bypass route என்பதை அடிக்கடி கேட்டிருப்பீர்கள். நெரிசலாக உள்ள நகர்ப்பகுதி களைத் தவிர்ப்பதற்காக உருவாக்கப் பட்ட புறவழிச் சாலை என்று அதைக் கூறலாம்.

இதயத்தில் bypass அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களையும் பார்த்திருப்பீர்கள். இதுவும் ஒருவிதத்தில் புறவழிதான். அதாவது இதயத்துக்குச் செல்லும் ஒரு முக்கியமான ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்து அதை சரி செய்வது கஷ்டம் என்றால் அடைப்புப் பகுதியின் இருபுறங்களையும் இணைக்கும் விதத்தில் வேறொரு பாதையை உண்டாக்கி விடுவார்கள். அதன் வழியாக ரத்தம் தடையில்லாமல் செல்லும்.

தவிர்ப்பது என்கிற நேரடி அர்த்தத்திலும் bypass பயன்படுகிறது. The bank manager bypassed all rules and sanctioned the loan immediately.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com


தவறவிடாதீர்!

  ஆங்கில அறிவுமொழி அறிவுஆங்கிலம் அறிவோமேபொதுஅறிவுஆங்கில வழிகாட்டி

  Sign up to receive our newsletter in your inbox every day!

  More From This Category

  weekly-updates

  சேதி தெரியுமா?

  இணைப்பிதழ்கள்

  More From this Author

  x