Published : 02 Feb 2015 12:48 PM
Last Updated : 02 Feb 2015 12:48 PM

வெற்றி மொழி: லியோ டால்ஸ்டாய்

1828-ம் ஆண்டு பிறந்த லியோ டால்ஸ்டாய், 1910 வரை வாழ்ந்த ரஷ்ய எழுத்தாளர் ஆவார். கட்டுரையாளர், நாடக ஆசிரியர், சீர்திருத்தவாதி என பண்முக திறமைகள் கொண்டவர். தொடக்க காலத்தில் நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எழுதத்தொடங்கி, பின்னர் நாடகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதி புகழ்பெற்றார்.

இவரது ஆரம்பகால படைப்பான ``வார் அண்ட் பீஸ்”, மிகச்சிறந்த நாவலாகக் கருதப்படுகிறது. உலகின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக போற்றப்பட்ட டால்ஸ்டாய், தனது வாழ்வின் இறுதி வரையிலும் எழுத்துப்பணியினை தொடர்ந்தார்.

# பொறுமை மற்றும் நேரம் ஆகியவையே, மிகவும் சக்தி வாய்ந்த வீரர்களுக்கு இணையானது.

# எல்லோரும், உலகம் மாறவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, தான் மாறவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.

# நமது வாழ்க்கையின் ஒரே அர்த்தம், மனித குலத்திற்கு சேவை செய்யவேண்டும் என்பதே.

# ஒரு விநாடி கூட, நாம் நம்மை சந்தேகிக்க அனுமதிக்க கூடாது.

# மகிழ்ச்சி என்பது வெளிப்புற விஷயங்களைப் பொறுத்ததல்ல, எந்த வழியில் அதனை அணுகுகிறோம் என்பதை பொறுத்ததே.

# நமக்கு எதுவும் தெரியாது என்று மட்டும் அறிந்துகொள்ளமுடிவதே, மனித ஞானத்தின் மிக உயர்ந்த படிப்பு.

# வாழ்க்கையில் முழு திருப்தியை எதிர்பார்க்கின்றீர்களா? உங்களால் ஒருபோதும் மனநிறைவுடன் இருக்க முடியாது.

# வாழ்வில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களே, வாழ்க்கையை உண்மையாக வாழ வைக்கின்றன.

# எங்கு எளிமை, நேர்மை மற்றும் உண்மை இல்லையோ. அங்கு உயர்வும் மேண்மையும் இல்லை.

# நான் யார், நான் ஏன் இங்கிருக்கிறேன் என்பதை அறியாதவரை வாழ்க்கை சாத்தியமற்றதே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x