Published : 06 Jan 2015 04:20 PM
Last Updated : 06 Jan 2015 04:20 PM

வெற்றி நூலகம்

விஞ்ஞானிகளின் உழைப்பின் கதை

இந்திய விஞ்ஞானிகள் 40 பேரின் வாழ்க்கையை நமக்கு விளக்கும் நூல். இன்று நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பின் பின்னாலும் எவ்வளவு வலிகளும்,உழைப்பும், இருக்கின்றன என்பதை நம்முன் வைக்கிறது. இதை வாசிப்பவரின் கனவு விரியும். நம்பிக்கை வலுப்படும். உற்சாகம் பிறக்கும்.

அக்னிச் சுடர்கள்

(அறிவியல் வானில் மின்னும் இந்திய நட்சத்திரங்கள்),

அரவிந் குப்தா, தமிழில்- விழியன்,

வெளியீடு:புக்ஸ் ஃபார் சில்ரன், 7,இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை, சென்னை 600 018,

விலை: ₹ 160, தொடர்புக்கு: 044-24332424

மனதோடு ஒரு உரையாடல்

மன ஓட்டங்களை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து நாம் எதை, எப்படி, ஏன் செய்ய வேண்டும் என விளக்கும் புத்தகம். வாழ்க்கையைச் சரியாக புரிந்து கொள்ள,எளிய விளக்கங்கள். மனதைப் புரிந்து கொள்ள,பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெற உதவும் நூல்.

மனதோடு ஒரு சிட்டிங்

ஆசிரியர்- சோம. வள்ளியப்பன்

வெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ்

10/2 (8/2) போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை,

தி.நகர்,சென்னை- 600 017

விலை- ரூ 85 தொடர்புக்கு:7200050073

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x