

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்கில் (CEG) இன்று (28 ஜனவரி) 9-ஆம் ஆண்டு குருக்ஷேத்ரா விழா துவங்கவுள்ளது.
இன்று தொடங்கி 4 நாட்களுக்கு (31 ஜனவரி வரை) இந்த விழா நடைபெறவுள்ளது. சர்வதேச அளவில் 20,000 மாணவர்கள் பங்கு கொள்ளும் இவ்விழாவில் வழங்கப்படும் பரிசுத் தொகையின் மொத்த மதிப்பு மட்டும் 10 லட்சம் ரூபாய்.
பொறியியலின் ஒவ்வொரு துறையச் சேர்ந்த மாணவர்களுக்கும் வெவ்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளது. நேரில் வந்து கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக, ஆன்லைன் மூலமாகவும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளோடு பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களோடு கலந்துரையாடல்களும் , சிறப்பு உரைகளும், பயிலரங்கங்களும் நடைபெறவுள்ளன.
தொழில்நுட்ப-நிர்வாகம் சார்ந்த கல்லூரி மாணவர்கள் விழாவான குருக்ஷேத்ரா, நாட்டிலேயே முதல் முறையாக யுனெஸ்கோவின் ஆதரவை பெற்ற கல்லூரி விழா என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தகவல்களுக்கு: >www.kurukshetra.org.in