Last Updated : 02 Jan, 2015 01:31 PM

 

Published : 02 Jan 2015 01:31 PM
Last Updated : 02 Jan 2015 01:31 PM

இது எங்கள் புத்தாண்டு சபதம்...

2015 பிறந்துவிட்டது. எல்லோரும் உற்சாகத்தோடு இந்த வருடத்துக்கான தீர்மானங்களை எடுத்திருப்பீர்கள். நம் இளவட்டங்கள் இந்தப் புத்தாண்டில் என்ன தீர்மானங்கள் எடுத்துள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம் வாங்க.

வி.எம். அமர்நாத்

காசு வந்ததும் பைக் வாங்கித் தந்திடுவார்னு தெரிஞ்சும், அப்பாவ அடிக்கடி நச்சரிக்கிறேன். அதை நிறுத்தணும். எங்க அம்மாவுக்கு வீட்டு வேலையில கொஞ்சமாவது ஒத்தாச பண்ணணும். கவுன்சிலர்கிட்ட சொல்லி, ஏரியாவுல இருக்கிற கருவேல மரங்களை எல்லாம் அப்புறப்படுத்தணும். படிப்பை முடிக்கிறதுக்குள்ள முன்னாள் மாணவர் சங்கத்தை வலுப்படுத்தணும்.

ஜி.வெரோணிக்காள்

அடிக்கடி பொய் சொல்றது மட்டுமில்லாம, பிளான் பண்ணாம ரொம்ப இயல்பா பேசுற அளவுக்குத் திறமைசாலியாகிட்டேன். அதை மொதல்ல நிறுத்தணும். அம்மா ஒரு துரும்பை எடுத்துப் போடச் சொன்னாலும், என்னமோ உலகத்தையே உருட்டச் சொன்னது மாதிரி லுக் விடுறதை நிறுத்தணும்.

ஆர்.சித்ரா

அக்காகிட்ட சண்டை போடக் கூடாது. நேரத்தைத் திட்டமிட்டுச் செலவழிக்கணும். நல்ல பெர்சென்டேஜோட டிகிரி வாங்கணும்.

எம்.ஜீவா

ஏரியா நண்பன் கோகுல்கிட்ட சண்டை போட்டுட்டேன். இப்ப அவனை ரொம்ப மிஸ் பண்றேன். முதல் வேலையா அவன்கிட்ட சமாதானம் ஆகணும். உருப்படியான பத்திரிகை அல்லது புத்தகத்தில் தினமும் நாலு பக்கமாவது படிக்கணும்.

எம்.ராதா

புரியலைன்னு அடிக்கடி மேத்ஸ் கிளாஸை கட் அடிக்கிறேன். இந்த வருஷத்துல இருந்து கிளாஸ்ல இருந்து கவனிக்க முயற்சி பண்ணணும். டி.வி. பார்க்கிறதைக் குறைச்சிக்கிட்டு, தினமும் அம்மா, அப்பாகூட ஃபிரியா பேசணும். குட்டிப் பொண்ணா இருந்த காலம் மாதிரியே, இப்பவும் காலேஜ்ல நடந்ததை எல்லாம் அப்படியே ஒப்பிக்கணும்.

ஆர்.பாக்யஸ்ரீ

எங்க குரூப்புக்கே நான் தான் கைப்புள்ள. குரூப்போட உச்சபட்ச சந்தோஷமே என்னைய ஓட்டுறதுதான். அது தெரிஞ்சும் சில சமயம் கோபப்பட்டுடுறேன். இனிமே கோபத்தைக் குறைக்கணும். வேலை கிடைக்கிற அளவுக்கு நல்ல மதிப்பெண் வாங்கி படிப்பை முடிக்கணும்.

சிவாஜி

(பெயரை ஜி.சிவான்னு எழுதக் கூடாது என்ற நிபந்தனையோடு பேசுகிறார்):

என்னைய பாருங்கண்ணே... செகண்ட் இயர் ஸ்டூடண்ட் மாதிரியா இருக்கேன்? பழகலாம்னு பொண்ணுங்க பக்கத்துல போனா, ‘சொல்லுடா தம்பி’ங்கிறாங்க. உடம்பை ஏத்தணும், அது தான் என்னோட ஓராண்டுத் திட்டம்.

எம்.சதக்கத்துல்லா

ஏரியா கிரிக்கெட் டீம்ல என் பவுலிங்குக்கு ஒரு பய பயப்பட மாண்டேங்கிறான். அடுத்த வருஷத்துல இருந்து பவுலிங்ல மிரட்டணும். அரபி கத்துக்கணும். இறை பக்தியை வளர்த்துக்கணும்.

ஆர்.ராஜேஷ் கண்ணா

நம்ம வாலிபால் டீம்லேயே நல்ல பிளேயர் இவன் தான்னு பேர் வாங்கணும். என் காதலுக்கு அப்பா, அம்மாவோட சம்மதம் வாங்கணும்.

வி.ஆனந்தி:

அஞ்சாங்கிளாஸ் படிக்கிற என் தம்பிகிட்ட எதுக்கெடுத்தாலும் சண்டை போடுறேன். இனிமே என் செல்ல தம்பிகிட்ட அன்பா இருக்கணும். டயட் கண்ட்ரோல் பண்ணணும்.



“அதுசரி, கடந்த ஆண்டு எடுத்த உறுதிமொழிகளில் எதை எல்லாம் நிறைவேற்றுனீங்க?” என்று கேட்டது தான் தாமதம்... எல்லோரும் எஸ்கேப்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x