Published : 07 Apr 2014 11:48 AM
Last Updated : 07 Apr 2014 11:48 AM

அந்த நாள் ஞாபகம்: இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் ராஜினாமா செய்த நாள்

1955, ஏப்ரல் 7

சர்ச்சில் (1874-1965) இங்கிலாந்தின் பிரதமர்களில் மிக முக்கியமானவர். ராணுவ அதிகாரி,எழுத்தாளர் என பன்முக ஆற்றல்கள் கொண்டவர். வெற்றி என்பதற்கு ஆங்கில எழுத்தான V ஐ குறிக்க இரண்டு விரலை காட்டும் பழக் கத்தை கொண்டுவந்தவர் அவரே.

சர்ச்சில் கன்சர்வேட்டிவ் கட்சியில் சேர்ந்தார். 1940 முதல் 1945 வரையும் 1951 முதல் 1955 வரையும் என இரண்டு முறை பிரதமராக இருந்துள்ளார். அவர் உடல் நலமின்மையால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நாள் இன்று. ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கும் போர் நடந்த காலத்தில் வெற்றிகரமாக அவர் இங்கிலாந்தை வழிநடத்தினார். அவரது உரைகள் ஆங்கி லேயர்களை உற்சாகமூட்டின.

இரண்டாம் முறை பிரதமராக அவர் இருந்தபோது உடல்நலமின்மை யால் ராஜினாமா செய்தார். 2002ல் நடத்தப்பட்ட ஒரு கருத்தெடுப்பு அவர் இங்கிலாந்தின் மக்களால் இன்னமும் மதிக்கப்படுகிறார் என்கி றது. அமெரிக்கா அவருக்கு கவுரவ குடிமகன் விருதை அளித்தது.

இரண்டாம் உலகப்போர் பற்றிய அவரது எழுத்துக்களின் தொகுப் புக்காக அவருக்கு கலை இலக்கியத்துக்கான நோபெல் பரிசு அளிக் கப்பட்டது. இந்தியர்களை அவர் கடுமையாக வெறுத்தார். அவரது போர்க் கொள்கையால் இந்தியாவின் வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டது. 30 லட்சம் பேர் வரை உயிரிழக்க அவர் காரணமாக இருந்தார். அதைத் தடுக்க எந்த உதவியையும் செய்ய அவர் மறுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x