Last Updated : 12 Jan, 2015 01:27 PM

 

Published : 12 Jan 2015 01:27 PM
Last Updated : 12 Jan 2015 01:27 PM

சி.இ.ஓ செய்ய வேண்டியது என்ன?

ஒரு நிறுவனத்துக்கு தலைமை ஏற்பவருக்கு அத்துறை குறித்த அனுபவம் இருக்கிறதா? அனைத்துத் துறைகளிலும் அதாவது விற்பனை, சந்தைப்படுத்துதல், நிதி, செயல்பாடு தொழில்நுட்ப விவரங்கள் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். நிறுவனத்தின் அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைப்பவராக அவர் இருக்க வேண்டும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் நிறுவனத்தில் ஏ முதல் இஸட் வரை அனைத்தும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட தொழில் குறித்து அவருக்குப் போதிய அனுபவம் இல்லாதுபோனால் மிகவும் இக்கட்டான சந்தர்ப்பத்தில் அவரால் சரியான முடிவை எடுக்க முடியாது.

சிஇஓ-வின் முக்கியமான வேலையே சிறந்தவர்களை நிறுவனத்திற்குச் சேர்ப்பதுதான். ஒவ்வொரு துறை பற்றியும் அவருக்கு போதிய பரிச்சயம் இல்லையெனில் அப்பிரிவில் திறமையானவர்களை அவரால் அடையாளம் காண முடியாமல் போகும்.

இதனால் அவர் தேர்வு செய்வோர் நிறுவன எதிர்பார்ப்புக்கு ஏற்றவராக நிச்சயம் இருக்க மாட்டார். இதனால் முக்கியமான பதவிக்கு பணியாளர்களைத் தேர்வு செய்வதில் சிஇஓ-க்கள் சில வழி முறைகளை பின்பற்ற வேண்டும்.

ஒரு மிகச் சிறந்த சிஇஓ என்பவர் நிறுவனத்துக்கு முதலீடுகளைக் கொண்டு வருபவராக இருக்க வேண்டும். தொழில் முனைவு உள்ள சிஇஓ தனது குழு மற்றும் அதன் திறமையை நன்கு உணர்ந்தவராக இருப்பார்.

சிஇஓ-வின் முக்கியமான வேலையே சிறந்தவர்களை நிறுவனத்திற்குச் சேர்ப்பதுதான். ஒவ்வொரு துறை பற்றியும் அவருக்கு போதிய பரிச்சயம் இல்லையெனில் அப்பிரிவில் திறமை யானவர்களை அவரால் அடையாளம் காண முடியாமல் போகும். இதனால் அவர் தேர்வு செய்வோர் நிறுவன எதிர்பார்ப்புக்கு ஏற்றவராக நிச்சயம் இருக்க மாட்டார். இதனால் முக்கியமான பதவிக்கு பணியாளர்களைத் தேர்வு செய்வதில் சிஇஓ-க்கள் சில வழி முறைகளை பின்பற்ற வேண்டும்.

சிறந்த கருத்து பரிமாற்றத் திறன்

சிஇஓ-வாக இருப்பவர் சிறந்த முறையில் கருத்துகளை பரிமாறிக் கொள்ளத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

அவர் மூன்று வகையான பிரிவினருடன் அதாவது நிறுவனத்தின் பங்குதாரர், தொழிலாளர் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தகவல்களைப் பரிமாற வேண்டும். நிறுவனத்தின் எதிர்கால குறிக்கோள் குறித்து தனது பணியாளர்களுக்கு தெளிவாகத் தெரிவித்து இலக்கை எட்டுவதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

வாடிக்கையாளரும், பங்குதாரர்களும் தங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பேச்சு இருப்பின் அதை எடுத்துக் கொள்வர். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்கான கொள்கைகளை வகுப்பவரே சிறந்த சிஇஓ-வாக இருக்க முடியும்.

குழு செயல்பாடு

நிறுவன இலக்கை எட்டுவதில் அனைத்து பணியாளர்களும் குழுவாக செயல்பட வேண்டும். இதை ஒவ்வொரு கட்டமாக நிறைவேற்ற வேண்டும். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பிறகு அதை எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்பதை விரிவாக பேச வேண்டும். முதலில் நிறுவனத்தின் இலக்கை சிஇஓ-வும் பணியாளர்களும் நன்கு புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதன் பிறகு தேவைக்குத் தகுந்தபடி சிறு சிறு தகவல்களாக முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டும்.

முதலீட்டாளர்கள் முதலில் முதலீடு செய்ய மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்களது குழுவை அவர்கள் பார்வையிட்டு செயல்பாடுகளை மதிப்பீடு செய்த பிறகு நம்பிக்கை ஏற்பட்டால்தான் அவர்கள் முதலீடு செய்வர். அத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக சிஇஓ-வின் பேச்சும் குழுவின் செயல்பாடும் இருக்க வேண்டும். இலக்கை எட்டுவதற்கு நிறுவனத்துக்கு ஓராண்டாகும் என்பது புரிய வைக்க வேண்டும். இத்தகைய காலத்தை எடுத்துக் கொண்டு அதன் பிறகு இலக்கை நோக்கி முன்னேறுங்கள்.

இதை எவ்விதம் செயல்படுத்துவது?

மணிக்கணக்கில் பிரசங்கம் செய்வதைக் காட்டிலும் ஒரு சில மணி நேர செயல்பாடுகளில் நிரூபிக்கலாம். எது சரி அல்லது எது தவறு என்பதை உணர்த்த முடியும். நிறுவனத்தின் கொள்கைகளுக்கு விரோதமாக, கீழ்ப்படியாமல் நடப்பவர்களை வெளியேற்ற தயக்கம் காட்டக் கூடாது. ஊழியர்களை வெளியேற்றுவது என்பது மிகவும் இக்கட்டான தருணம்தான். இந்த விஷயத்தில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேற் றப்பட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

பொதுவாக பெரும்பாலான சிஇஓ-க்கள் ஒருசில குறிப்பிட்ட துறைகளில்தான் அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். இவருக்கு பரிச்சயம் இல்லாத சில துறைகளில் இவர்கள் எடுக்கும் முடிவுகள் அதை பாதிக்கும் வகையில் அமையக் கூடும். ஒரு மிகச் சிறந்த சிஇஓ என்பவர் நிறுவனத்துக்கு முதலீடுகளைக் கொண்டு வருபவராக இருக்க வேண்டும். தொழில் முனைவு உள்ள சிஇஓ தனது குழு மற்றும் அதன் திறமையை நன்கு உணர்ந்தவராக இருப்பார்.

நீங்கள் தேர்வு செய்து அவர்களுக்கு உயர் தரத்தில் பயிற்சி அளித்து உங்களுக்குத் தெரிந்த நிர்வாகவியல் அடிப்படையை அவருக்குக் கற்றுத் தாருங்கள். அதிலும் உங்களுக்கும் சில எல்லைகள் உள்ளன. ஆனால் சிஇஓ என்பவருக்கு வானமே எல்லை. இது அவரது குழுவினருக்கும் பொருந்தும்.

கே.சுவாமிநாதன்

aspireswaminathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x