Published : 02 Dec 2014 01:04 PM
Last Updated : 02 Dec 2014 01:04 PM

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 35

பொதுத் தமிழ்

1059. பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்து எந்த மன்னனைப் பாடுகிறது?

1060. மணிமேகலை எந்தச் சமயக் காப்பியம்?

1061. உத்தரபுராணத்தின் வழிவந்த நூல் எது?

1062. பேச்சுவழக்கில் 'இன்னும் வரவில்லையே' என்னும் வாக்கியம் எதைக் குறிக்கும்?

1063. மருதத் திணைக்குரிய தொழில் எது?

1064. 'காந்தள் மலர்' எத்திணைக்குரியது?

1065. 'காண்' எனும் வேர்ச்சொல்லின் பெயரெச்ச வடிவம் என்ன?

1066. தொல்காப்பியச் சொல்லதிகாரம் எத்தனை இயல்களைக் கொண்டது?

1067. 'மான்மியம்' என்பதன் பொருள் என்ன?

1068. 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்' என்று பாடியவர் யார்?

1069. அகநானூற்றுப் பாக்களின் அடி வரையறை யாது?

1070. 'ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு நாய கன்போர்க் குகன் எனும் நாமத்தான்' என்ற கம்பராமாயணப் பாடலில் வரும் அம்பி என்ற சொல்லின் பொருள் என்ன?

1071. முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார்?

1072. வைணவ சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாறிய புலவர் யார்?

1073. நாட்டுப்புறப் பாடலில் வரும் மீனவர்களின் அரிச்சுவடி எது?

1074. 'வியா இலங்குவரை உந்திய தோள்களை' இப்பாடல் இடம் பெறும் நூல் எது?

1075. பெருமையும் எழிலும் பொருந்திய பத்மநாபனின் கையில் இருப்பது எது?

1076. 'வள்ளுவனைப் பெற்றதால் புகழ் வையகமே' எனப் பாடியவர் யார்?

1077. 'ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?' என உரைப்பது யார்?

1078. சம்பரன் எனும் அரக்கனைப் போரில் வென்றவர் யார்?

1079. பட்டினப்பாலைச் சுட்டும் பெருமைமிகு பட்டினம் எது?

1080. பணை என்னும் சொல்லின் பொருள் யாது?

1081. திவ்வியப்பிரபந்தத்துக்கு உரை வழங்கியவர் யார்?

1082. 'கிறித்துவக் கம்பர்' - யார்?

1083. கலித்தொகை எதன் வழிப் பெயர் பெற்றது?

1084. 'செய்தக்க செய்யாமை யானும் கெடும்' என்ற வரி எந்த நூலில் இடம்பெறுகிறது?

1085. மணநூல் என சிறப்பிக்கப் படுவது?

1086. ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல் எது?

1087. நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?

1088. யாருடைய கல்வி இனிமை பயக்கும்?

1089. இயேசுவின் 12 சீடர்களில் ஒருவன் .........................

1090. ஆளுடைய அரச என அழைக்கப்படுபவர் ..............................

1091. 'எறும்பும் தன் கையால் எண் சாண் உடையதே' என்ற பாடல் வரிகள் மூலம் ஒளவையார் உணர்த்துவது?

1092. திருமந்திரத்தை இயற்றியவர் யார்?

1093. திரிகடுகம் என்ற நூல் தலைப்பு உணர்த்தும் மூன்று மருந்துப் பொருட்கள் யாவை?

விடைகள்:

1059. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

1060. புத்த சமயம்

1061. யசோதர காப்பியம்

1062. உணர்ச்சி

1063. நெல்லரித்தல்

1064. குறிஞ்சி

1065. கண்ட

1066. ஒன்பது

1067. தலபுராணம்

1068. அப்பர்

1069. 13 அடி முதல் 31 அடி வரை

1070. படகு

1071. குமரகுருபரர்

1072. காளமேகப் புலவர்

1073. மீன்பிடி வலை

1074. தேவாரம்

1075. சக்கரம்

1076. பாரதிதாசன்

1077. ஆண்டாள்

1078. தசரதன்

1079. காவிரிபூம்பட்டினம்

1080. மூங்கில்

1081. பெரியவாச்சான் பிள்ளை

1082. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

1083. யாப்பு வகையால்

1084. திருக்குறள்

1085. சீவகசிந்தாமணி

1086. தக்கயாகப் பரணி

1087. பாண்டியன் மாறன் வழுதி

1088. அவைக்கு அஞ்சாதவனின்

1089. யூதாஸ்

1090. அப்பர்

1091. கற்றார் செருக்குக் கொள்ளக் கூடாது

1092. திருமூலர்

1093. சுக்கு, மிளகு, திப்பிலி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x