Published : 16 Dec 2014 04:12 PM
Last Updated : 16 Dec 2014 04:12 PM

வெற்றி நூலகம் - 16/12/14

சரித்திரம் படைத்த ஆளுமைகள்

அறிவியலுக்கு அளவிட முடியாத பங்களிப்பைத் தந்தவர் சர் ஐசக் நியூட்டன். இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரை வீரத்துடன் எதிர்த்து போரிட்டவர் வீரமங்கை வேலு நாச்சியார். பார்வையோற்றர் படிக்க பிரெயில் எழுத்துமுறையைக் கண்டறிந்தவர் லூயீ பிரெய்ல். அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகப் போராடியவர் ரோஸா பார்க்ஸ். இந்த நால்வரைப் பற்றியும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட நான்கு எளிய கட்டுரைகளின் தொகுப்பே மறக்க முடியாத வரலாறுகள் என்னும் இந்நூல்.

மறக்க முடியாத வரலாறுகள் l கு.கலைச்செல்வன்

டாக்டர் லட்சுமி விஸ்வநாதன் l அனுராதா ரமணன்

வெளியீடு: யுரேகா புக்ஸ், சென்னை-86. தொலைபேசி: 044-28601278

விலை: ரூ. 40



வெற்றிக்கான சாவி

எல்லோருடைய கனவும் வெற்றி. எதிலும் எப்போதும் வெற்றி. ஆனால் எல்லோருக்கும் கிடைக்காத வெற்றியை எல்லோருக்கும் கிடைக்கச்செய்ய வேண்டுமே? அதற்கான முயற்சிதான் இந்நூல். வெற்றியாளர்கள் வெற்றிபெற்ற விதத்தை எடுத்துச் சொல்லி அதன் மூலம் எல்லோரையும் வெற்றி என்னும் இலக்கை நோக்கி முடுக்கும் மந்திரம் இது. எல்லோருக்கும் சாத்தியமான வெற்றியை எல்லோருக்கும் சாத்தியப்படுத்துவதே இதன் நோக்கம். எல்லோருக்குள்ளும் ஏராளமான ஆற்றல் பொதிந்துகிடக்கிறது. அதை வெற்றிக்கான ஆயுதமாக மாற்ற வேண்டியது மட்டுமே செய்ய வேண்டிய பணி. அதை உணர்த்துகிறது இந்நூல்.

இது சக்சஸ் மந்திரம் அல்ல l சித்தார்த்தன் சுந்தரம்

வெளியீடு: சிக்ஸ்த்சென்ஸ், சென்னை 600 017. கைப்பேசி: 7200050073

விலை: ரூ. 85



உலகம் பிறந்த கதை

பேரண்டத்திலிருந்து உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்வியைக் கேட்டுவிட்டுப் பதிலுக்காக அலைந்தால் அநேக பாதைகள் கண்ணெதிரே தோன்றும். அத்தனை வழியேயும் சென்று அதற்கான விடையைக் கண்டடைவது கடினம். ஆக, பதிலும் வேண்டும் எளிமையான வழியாகவும் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. சுலபமான வழி பேரண்ட வரலாறு புத்தகத்தை வாசிக்க வேண்டியதுதான். ஏனெனில் அதன் நோக்கம் அதுதான். அதாவது பேரண்டத்தின் மிக நீளமான வரலாற்றை அனைவருக்கும் விளங்கும் வகையில் சுருக்கமாகத் தருவது.

பேரண்ட வரலாறு l முனைவர் க. மணி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98. தொலைபேசி: 26241288

விலை: ரூ. 30

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x