Published : 29 Dec 2014 12:22 PM
Last Updated : 29 Dec 2014 12:22 PM

மனம் மகிழ மழலைச் செல்வம் பெற்றுவிடலாம்

குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்றார் வள்ளுவர். ஒரு குழந்தையை ஈன்றெடுத்தல் என்பது பெருந்தவம். குழந்தையின் நலம் காணல் தாயின் கருவில் பிரசவிப்பதில் இருந்தே தொடங்கி விடுகிறது.

கர்பப்பையில் கரு உருவாகும் காலத்தில் இருந்தே ஒவ்வொரு மாதமும், தாய் மருத்துவ பரிசோதனை செய்து கருவின் வளர்ச்சியைக் காண்பது மிகவும் அவசியமானது. குழந்தை உருவான மூன்று மாதத்தில் மூளை, இதயம், முதுகுத் தண்டுவடம், கண், கை, கால் ஆகிய உறுப்புகள் உருவாகத் தொடங்குகின்றன. இந்த நிலையில் USG ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டால் குழந்தையின் சீரான வளர்ச்சியைக் கணித்து விடலாம்.

நல்ல ஆரோக்கியமான கரு உருவாவதற்கு ஃபோலிக் ஆசிட் மற்றும் மல்ட்டி விட்டமின் உடம்பில் அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு, திருமணம் ஆனவுடன் கருத்தரிக்க அதிக வாய்ப்பு இருப்பதால், திருமணத்திற்கு இரண்டு மாதம் முன்னரே மகப்பேறு மருத்துவர் ஆலோசனைப்படி சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது என்கிறார் இம்மருத்துமனையின் மகப்பேறு மருத்துவர்.

மாறிவரும் வாழ்வியல் சூழ்நிலைகளாலும், அடிப்படையான மருத்துவ காரண, காரணிகளாலும் குழந்தையின்மை அல்லது கருவுறாமை எனும் நிலை திருமணமான தம்பதியினரிடையே அதிகம் நிலவுகிறது. இக்காரணிகளை மருத்துவ முறைப்படி, புதிய தொழில்நுட்பத் துணையோடு கருத்தரிக்க வைக்கிறார் ப்ராணா கருத்தரிப்பு மைய இயக்குநர் மற்றும் தலைமை மருத்துவர் டாக்டர். டி.ஜி.சிவரஞ்சனி. கர்பப்பையில் வீரியமுள்ள விந்தணுக்களை நுண்ணிய தொழில்நுட்ப முறையில் தேர்ந்தெடுத்து, ஊசி மூலம் செலுத்தி கருக்கட்டச் செய்வது இன்றைய விஞ்ஞான மருத்துவ சாத்தியம்.

கருவுறாமல் வருந்தும் இளம் தம்பதியினருக்கு Intra Uterine Insemination (IUI) எனப்படும் இந்த எளிய மருத்துவ முறை மூலம் கருக்கட்ட இயலும் என்கிறார் இவர். ஃபெலோப்பியன் குழாய்களில் (Fallopian Tubes) அடைப்பு, குறைவான விந்தணு அளவுகள், (Endometriosis), விந்து உயிரணு செயலிழப்பு மற்றும் கண்டறியப்படாத பல்வேறு குறைபாடு உடைய தம்பதிகளுக்கு ‘இக்ஸி’ (ICSI) எனும் செயல்முறை அதிகபட்ச பயனளிக்கக் கூடியது. இம்முறைப்படி சைட்டோபிளாசத்தினுள் சரியான விந்தணுவை மிக நுண்ணிய மைக்ரோஸ்கோப்புகள் (Microscopes) மூலம் உட்செலுத்தி கருக்கட்டல் செய்ய முடியும்.

தாயின் சூலகத்தில் (Ovary) இருந்து கருமுட்டைகள் பிரித்தெடுக்கப்பட்டு விந்தணுக்களோடு ஆய்வகத்தில் கருவுறச் செய்யப்படுகின்றன. பின்னர் இக்கரு பெண்ணின் கர்பப்பையினுள் செலுத்தப்படுகிறது.

பிளாஸ்டோஸிட் வளர்ப்பு (Blastocyst Culture) எனும் முறையின் கீழ் உகந்த ஆய்வக சூழலில் ஐந்தாம் நாள் வரை கரு வளர்க்கப்படுகிறது. பின் அக்கருவை பெண்ணின் கருப்பையில் பொதிந்து வைத்தல் ஆகும். இளம் வயது தம்பதியினருக்கும், அதிக கருமுட்டை எண்ணிக்கை கொண்டவர்களுக்கு இச்சிகிச்சை வெற்றிகரமான பயனை அளிக்கும்.

குறைவான கரு வளர்ச்சி உள்ளவர் களுக்கு கரு ஓடு அதிகத் தடிமன் கொண்ட பெண்களுக்கும் சில நேரங்களில் கருமுட்டையின் கூட்டில் லேசர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிறு துளை இடப்படுகிறது. இம்முறைக்கு Assisted hatching என்று பெயர். சமீபத்திய ஆய்வுகள் இம்முறை அதிகக் கருத்தரிப்பு விகிதத்தை அளிப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

குழந்தையின்மை என்பது ஒரு குறைபாடு அல்ல. தீர்க்கக்கூடிய ஆனால் சிக்கலான ஒரு பிரச்சனை. இதை கருத்தில் கொண்டு, இத்துறையில் தேர்ந்த வல்லுநர்களோடும், ஈடிணையற்ற தொழில்நுட்ப ஆய்வகங்களோடும், சரியான சிகிச்சை முறை கொண்டும், ஒரே இடத்தில் தாய்மை அடையச் செய்வதே எங்களின் இலக்கு என்கிறார் டாக்டர் டி.ஜி.சிவரஞ்சனி.

- இந்த முனைப்பில் ‘தி இந்து’ மீடியா பார்ட்னர்

டாக்டர் சிவரஞ்சனிபிராணா கருத்தரிப்பு மையம் மகப்பேறு குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கக் காத்திருக்கிறது. மேலும் விவரங்களுக்கு 044-33031242 என்று எண்ணுக்கு உங்கள் மொபைல் போனில் இருந்து மிஸ்டு கால் கொடுக்கலாம். 2015 ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் பிராணா கருத்தரிப்பு மையம் சார்பில் மகப்பேறு தொடர்பான முகாம் நடைபெறுகிறது. முன்பதிவு செய்துகொள்ள விரும்புகிறவர்கள் 044-33031242 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x