Published : 09 Dec 2014 12:20 PM
Last Updated : 09 Dec 2014 12:20 PM

வெற்றி நூலகம்

அதிசயங்கள் ஆயிரம்

காதலின் சின்னமாகக் கருதப்படும், ஆக்ரா நதிக்கரையில் வீற்றிருக்கும் தாஜ்மஹால் ஓர் உலக அதிசயம் என்பது நமக்குத் தெரியும். இது போன்று தற்போது உலக அதிசயங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கட்டிடங்கள் பற்றிய வித்தியாசமான தகவல்களின் தொகுப்பே உலக அதிசயங்கள் என்னும் இந்நூல். புதிய உலக அதிசயங்கள் எப்படித் தேர்வு செய்யப்பட்டன என்ற அலசலுடன் இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற அதிசயங்களின் அனைத்துத் தகவல்களையும் விறுவிறுப்பாகத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர் தா.  னிவாசன். அதிசயம் விரும்புவோரை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது நூல்.

உலக அதிசயங்கள்
தா. ஸ்ரீனிவாசன்
வெளியீடு: மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், கௌரிவாக்கம், சென்னை- 600073
கைப்பேசி:9444041871
விலை: ரூ. 70

ஆப்பிள் விஞ்ஞானி

புவிக்கு ஈர்ப்பு விசை உள்ளது என்பதைக் கண்டறிந்து உலகுக்கு வெளிப்படுத்திய அறிவியலாளர் சர் ஐசக் நியூட்டன். அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்வது மாணவர்களின் அறிவு மேம்பட உதவக்கூடும் என்னும் நம்பிக்கையில் இந்தப் புத்தகம் கள்ளிப்பட்டி சு. குப்புசாமியால் எழுதப்பெற்றுள்ளது. மிக எளிய நடையில் நியூட்டனின் வாழ்க்கைச் சம்பவங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைச் சுவாரசியமாக விவரித்துச் செல்கிறார் நூலாசிரியர். அறிவிலும் அறிவியலிலும் ஆர்வம் கொண்ட மாணவர்கள் படித்துப் பயன்படும் நோக்கத்தில் அமைந்துள்ளது இந்நூல்.

சர் ஐசக் நியூட்டன்
கள்ளிப்பட்டி சு. குப்புசாமி
வெளியீடு: சென்னை புக்ஸ்,
சென்னை 600 091
தொலைபேசி:044-22240229
விலை: ரூ. 40

இறந்தோர் இல்லங்கள்

எகிப்தின் பிரமிடுகள் என்றால் என்ன என்று அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேட்டிருப்போம். ஆனால் பிரமிடுகளின் அனைத்துவிதத் தகவல்களையும் மாணவருக்கும் மற்றவருக்கும் புரியும்வகையில் சுவைபட எழுதியுள்ளார் நூலாசிரியர் பிரதீப் குமார். பிரமிடுகள் எப்படி உருவாக்கப்பட்டன, அவற்றின் உதவி என்ன, அவற்றில் புதைந்துகிடக்கும் மர்மங்கள் எவை என்பன போன்ற பல புதிரான தகவல்களைப் புதுமையான கண்ணோட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கும் நூல் இது. பிரமிடின் கட்டுமான ரகசியத்தையும் அறிவியல் பின்னணியையும் அறிந்துகொள்ள விரும்புபவர்களை எளிதில் ஈர்த்துவிடும் இந்நூல்.

பிரமிடுகள் ஒரு மர்மமான அறிவியல் புதிர்
பிரதீப் குமார்
வெளியீடு: யுரேகா புக்ஸ், சென்னை-86
தொலைபேசி: 044-28601278
விலை: ரூ. 50

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x