Published : 10 Jul 2019 11:57 AM
Last Updated : 10 Jul 2019 11:57 AM

பள்ளி உலா

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி,

அம்பத்தூர்,  சென்னை.

கல்வியே சமூகத்தை மேம்படுத்தும் என்பதால் மாணவர்களுக்குத் தரமான கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 1997-ம் ஆண்டு 200 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் இருந்த இந்தப் பள்ளியில், இன்று 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

அறிவியல், கணினி ஆய்வுக்கூடம், சிறந்த நூலகம், ஸ்மார்ட் போர்டு வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் போன்றவை இருக்கின்றன. நிதி அயோக் மூலமாக மத்திய அரசின் உதவியுடன்  ஆய்வுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. யோகா, கராத்தே, சதுரங்கம், நடனம், நீட், ஜெஇஇ, ஐஐடி போன்றவற்றுக்குப் பயிற்சி அளிக்கப்படுகின்றன. 

மொழிப்பாடங்களாகத் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மூன்றும் கற்பிக்கப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் கல்வியில் சிறந்து விளங்கும் 10,11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய படிப்பு அளிக்கப்படுகிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேசிய, மாநில அளவில் மூன்றாம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்று, கல்வித்துறை இயக்கத்தின் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றிருக்கிறது.

உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஹாக்கி, கபடி, கிரிக்கெட் போட்டிகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தேர்ச்சி பெற்றுள் ளார்கள் இந்தப் பள்ளி மாணவர்கள்.

எஸ்கேபி வனிதா பன்னாட்டுப் பள்ளி,

திருவண்ணாமலை.

சர்வதேச தரத்திலான கல்வி இங்குள்ள மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ’கற்றலில் மேம்பாடுடைய ஒரு சிலருக்கான பள்ளி அல்ல, அனைத்து மாணவர்களுக்கு மானது’ என்பதை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டுவருகிறது. 

அழகிய தமிழின் இலக்கிய, இலக்கணங்களைப் பயில ’தளிர் திறன் மேம்பாட்டகம்’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் மாணவர்களின் பேச்சு, நடிப்பு, நாட்டுப்புறப் பாடல்கள், விளையாட்டுகள் போன்றவை வளர்த்து எடுக்கப்படுகின்றன.

கீபோர்டு, கிடார், கணினி, யோகா, கிரிக்கெட், ஸ்கேட்டிங், வில்வித்தை, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் உள்ளிட்டவை சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது. ஸ்பெல் பீ எனும் சர்வதேச ஆங்கிலத் திறனறிப் போட்டியில் 28 மாணவர்கள் தேந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று மும்மொழிகளையும் இங்கே மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இவை தவிர ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பான் போன்ற மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. 

மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் வினாடி வினா, பேச்சு, கட்டுரை, விளையாட்டுப் போட்டிகளில் இந்தப் பள்ளி மாணவர்கள் பரிசுகளைப் பெற்று வருகிறார்கள். ‘கலாம் புக்ஸ் ஆப் வோல்டு ரெக்கார்டு’ அமைப்பின் மூலம் இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வில்வித்தைப் போட்டியில், ஒரு மணி நேரம் இடைவிடாமல் அம்பு எய்து சாதனை படைத்துள்ளனர்.

‘மாஸ்டர்ஸ் மேக்கர்ஸ் அகாடமி’ நடத்திய மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல் பரிசைப் பெற்றார்கள் இந்தப் பள்ளி மாணவர்கள். 

யோகாவில் மிஸ்டி, ஆகியோர் ‘யுனிவர்சல் புக்ஸ் ஆப் ரெக்கார்டு’ அமைப்பின் மூலமும் கிருத்திகா மாவட்ட யோகா அமைப்பின் மூலமும் உலக அளவில் சாதனை செய்துள்ளனர். ஆரோக்கியமான உணவும், சிறந்த கட்டமைப்பு வசதியும் இங்கே இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x