

அறிவியல் படிக்கும் மாணவிகளை ஊக்குவிக்க விருக்கிறது யூ.ஜி.ஏ.எம். லெக்ராண்ட் ஊக்கத்தொகைத் திட்டம் 2019. மின்னியல், டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான கட்டுமானத் தொழிலில் சர்வதேச அளவில் பெயர் பெற்ற கார்ப்பரேட் நிறுவனமான லெக்ரானின் திட்டம் இது.
தகுதி
அறிவியல் பாடப் பிரிவைப் படித்து 2019-ல் பிளஸ் 2 முடித்த மாணவி.
10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் குறைந்த பட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் 2019-2020 கல்வியாண்டில் பி.டெக். (B.Tech) அல்லது பி.இ. (B.E. )அல்லது பி.ஆர்க். (B.Arch.) படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதி உடைய மாணவிகளுக்கு உயர்கல்விக் கட்டணத்தில் 60 சதவீதம் அல்லது ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்:
25 ஜூலை 2019
விண்ணப்பிக்க:
http://www.b4s.in/vetrikodi/LFL2