வேலை வேண்டுமா? - உயர் நீதிமன்றப் பணி

வேலை வேண்டுமா? - உயர் நீதிமன்றப் பணி
Updated on
1 min read

சென்னை உயர் நீதிமன்றத்திலும் அதன் மதுரைக் கிளையிலும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் (76 காலியிடம்), தட்டச்சர் (229), உதவியாளர் (119), ரீடர் மற்றும் எக்ஸாமினர் (142), ஜெராக்ஸ் ஆபரேட்டர் (7) ஆகிய பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் வெளியிட்டது.

அதன்படி, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவிக்கு பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும், கம்ப்யூட்டரில் டிப்ளமா முடித்த கலை, அறிவியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.

தகுதி

மேலும், தட்டச்சில் தமிழ், ஆங்கிலத்தில் ‘ஹையர் கிரேடு’ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் பதவிக்குப் பட்டப் படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கிலத் தட்டச்சில் ஹையர் கிரேடு தேர்ச்சி அவசியம். உதவியாளர், ரீடர் மற்றும் எக்ஸாமினர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் ஆகிய பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்துப் பதவிகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பி.சி., பி.சி.- முஸ்லிம், எம்.பி.சி., டி.என்.சி., எஸ்.சி., எஸ்.சி.-அருந்ததியர், எஸ்.டி.) 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியைத் தமிழ்வழியில் படித்திருப்பவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு உண்டு.

தேர்வுமுறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது ஆங்கிலம், பொதுத் தமிழ், பொது அறிவு, கணிதத் திறன், ரீசனிங், அடிப்படைக் கணினி அறிவு ஆகிய பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.

உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் உடைய பட்டதாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தைப் (www.mhc.tn.gov.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், தேர்வு மையம், பாடத்திட்டம், சம்பளம், இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியான காலியிடங்கள் போன்ற விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31 ஜூலை 2019

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in