Published : 08 Jul 2019 11:44 AM
Last Updated : 08 Jul 2019 11:44 AM

ஜார்ஜ் ஹெர்பர்ட்

1593-ம் ஆண்டு முதல் 1633-ம் ஆண்டு வரை வாழ்ந்த ஜார்ஜ் ஹெர்பர்ட் இங்கிலாந்தை சேர்ந்த கவிஞர், சொற்பொழிவாளர் மற்றும் தேவாலய பாதிரியார். இங்கிலாந்தின் முன்னணி மத கவிஞர்களுள் ஒருவராகவும் சிறந்த மனோதத்துவ கவிஞராகவும் அறியப்பட்டவர்.

இவரது எழுத்துகளில் “தி டெம்பிள்” என்னும் கவிதைத் தொகுப்பு மிகவும் பிரபலமானது. ஆங்கிலம் மட்டுமின்றி லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளிலும் கவிதைகளை எழுதியுள்ளார். தனது படைப்புகளில் அவர் பயன்படுத்திய சொற்கள் மற்றும் செயல்திறனுக்காக பெரிதும் குறிப்பிடப்படுபவர். பதினேழாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கவிஞர்களுள் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

# காத்திருக்க வேண்டாம்; நேரம் ஒருபோதும் சரியானதாக இருக்காது.

# உங்களிடம் உள்ள பொருட்களைக் கொண்டு நீங்கள் நிற்கும் இடத்திலிருந்தே தொடங்கி செயல்படுங்கள்.

# கண்களுக்கு எல்லா இடங்களிலும் ஒரே மொழிதான்.

# ஒரு தந்தை என்பவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் மேலானவர்.

# பிரார்த்தனை பகல் பொழுதின் திறவுகோலாகவும், இரவின் பூட்டாகவும் இருக்க வேண்டும்.

# நல்ல சொற்கள் என்பவை குறைந்த செலவும், அதிக மதிப்பும் வாய்ந்தவை.

# ஒரு மென்மையான கட்டளையில் பெரும் சக்தி மறைக்கப்பட்டுள்ளது.

#மற்றொருவரின் சுமையாருக்கும் தெரியாது.

# ஒரு மென்மையான இதயம் எளிதான நூலின் மூலமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.

# நன்றாக வாழ்வதே சிறந்த பழிவாங்கும் செயல்.

# ஒரு கொழுத்த வழக்கை விட மெலிந்த சமரசம் சிறந்தது.

# வாங்குபவருக்கு நூறு கண்கள் தேவை, விற்பவருக்கு ஒன்றும் தேவையில்லை.

# அன்பையும் இருமலையும் மறைத்து வைக்க முடியாது.

# வாழ்க்கை என்றால் என்ன என்பதை அறிவதற்கு முன்பே பாதி வாழ்க்கை செலவிடப்பட்டுவிடுகிறது.

# இழப்பே சில நேரங்களில் சிறந்த ஆதாயமாக இருக்கிறது.

# ஒரு விஷயத்தை செய்வதே மிகக் குறுகிய பதில் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x