Last Updated : 18 Aug, 2017 09:55 AM

 

Published : 18 Aug 2017 09:55 AM
Last Updated : 18 Aug 2017 09:55 AM

மீசை முறுக்கிய யூடியூப் கலைஞர்கள்!

லாய்ப்பு மூலம் வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும் யூடியூப் கலைஞர்கள் எல்லாம் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது ‘மீசைய முறுக்கு’ படம். இந்தப் படத்தில் 3 யூடியூப் சேனல்களைச் சேர்ந்த கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.

யூடியூப் சேனலில் திறமையைக் காட்டிய 13 இளைஞர்களுக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருந்தார் அந்தப் படத்தின் இயக்குநர் ஹிப்ஹாப் ஆதி. இவர்கள் எல்லாருமே ‘மெட்ராஸ் சென்ட்ரல்’, ‘ஸ்மைல் சேட்டை’, ‘டெம்பிள் மங்கிஸ்’ ஆகிய யூடியூப் சேனல்களைச் சேர்ந்த கலைஞர்கள். இதில் ‘ஸ்மைல் சேட்டை’ குழுவின் முக்கியக் கலைஞரான விக்னேஷ்காந்த் கதாநாயகன் ஆதியின் நண்பனாக நடித்து சிரிக்கவைத்திருக்கிறார்.

Anbu அன்பு

“பெரிய திரையில் நடிக்க வாய்ப்பு கிடைச்சதே ஆதியால்தான். இந்தப் படத்துல நடிச்ச யூடியூப் சேனல் கலைஞர்கள் எல்லாருமே படத்துல் நடிக்கிறோம்னே ஃபீல் ஆகல. எங்க சேனல்ல வீடியோ எடுக்கறப்போ எப்படி ஜாலியா நடிச்சோமோ அதேமாதிரி கலகலன்னு நடிச்சோம்.

சமூக ஊடகங்களில் நடிக்குற எல்லாருக்குமே திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் என்ற உற்சாகத்தை இந்தப் படம் தந்துள்ளது. இதோடு நின்றுவிடாமல், இந்த ஆண்டு முடிவில் படம் தயாரிக்கும் யோசனையிலும் இருக்கோம் ” என்று கூறுகிறார் விக்னேஷ்காந்த் .

இவர் 4 ஆண்டுகள் எஃப்.எம். ரேடியோவில் ஆர்.ஜே.வாக இருந்து, பிறகு இளைஞர்களை மையமாக வைத்து தொடங்கிய சேனல்தான் ஸ்மைல் சேட்டை.

இதே சேனலைச் சேர்ந்த நந்தினி, அன்புவும் இப்படத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் அனுபவம் பற்றி அன்புதாசனிடம் கேட்டபோது, “முதல் முறை பெரிய திரையில் நடிப்பது ரொம்ப சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருந்துச்சு. இந்தப் படத்துல சஞ்சய் கேரக்டர்ல நடித்திருக்கிறேன்.

Vigneshவிக்னேஷ்காந்த்right

படத்தை தியேட்டர்ல பார்த்தப்ப நான் நடிச்ச காட்சிகள ஆடியன்ஸ் ரொம்பவே ரசிச்சு பார்த்தாங்க” என்று பூரிப்புடன் கூறுகிறார் அன்பு. படத்தில் டெம்பிள் மங்கீஸ் யூடியூப் சேனலைச் சேர்ந்த ஷாரா, பாலாஜியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சில நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றினாலும் மெட்ராஸ் சென்ட்ரல் சேனலைச் சேர்ந்த கோபி, சுதாகர் போன்றோருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்புக் கிடைத்தது.

சமூக ஊடக சேனல் மூலம் முகவரி பெற்றுப் பெரிய திரைக்கு வந்திருக்கும் இந்தக் கலைஞர்களுக்கு சினிமா வாய்ப்பு வரப்பிரசாதம்தான். இதன்மூலம் யூடியூப் சேனல்கள் பெருகவும், தங்கள் திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும் நடிப்புத் திறமையுள்ள இளைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x