Published : 08 Aug 2017 11:29 AM
Last Updated : 08 Aug 2017 11:29 AM

வேலை வேண்டுமா: பொறியியல் பட்டதாரிகளுக்குக் கடற்படைப் பணி

ந்தியக் கடற்படையில் நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் குறுகிய காலப் பணி (Short Service Commission) மற்றும் நிரந்தரப் (Permanent Commission) பணியிடங்கள் உள்ளன. அவற்றில் பொறியியல் பட்டதாரிகள் நேரடியாக அதிகாரிகளாகப் பணியமர்த்தப்பட உள்ளனர்.

தேவையான தகுதி

இதற்கு எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ருமென்டேஷன், இண்டஸ்ட்ரியல் புரடக்ஷன் உள்ளிட்ட பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் முதல் வகுப்பில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பைப் பொறுத்துவரை, விண்ணப்பதாரர்கள் 2.7.1993-க்கும் 1.1.1999-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

திருமணம் ஆகாதவர்

ஆண்கள், பொதுப் பிரிவு மற்றும் தொழில்நுட்பப் பிரிவு இரண்டுக்கும் விண்ணப்பிக்கலாம். பெண்கள் தொழில்நுட்பப் பிரிவின் நேவல் ஆர்க்கிடெக்சர் பிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஆண், பெண் இருபாலருக்குமே திருமணம் ஆகியிருக்கக் கூடாது.

தகுதியுடைய நபர்கள், பணித் தேர்வு வாரியத்தின் (Service Selection Board-SSB) சிறப்பு நேர்முகத் தேர்வு மூலமாகத் தேர்வுசெய்யப்படுவர். இதில், உளவியல் தேர்வு, நுண்ணறிவுத் திறன் தேர்வு, குழு விவாதம் உள்ளிட்டவை இடம்பெறும்.

கடற்படை அதிகாரி பணிக்குத் தேர்வு செய்யப்படுவோருக்குக் கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய நேவல் அகாடமியில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள், கடற்படையில் நேரடியாக சப்-லெப்டினென்ட் ஆகப் பணியமர்த்தப்படுவர். அதன் பிறகு லெப்டினென்ட், லெப்டினென்ட் கமாண்டர், கமாண்டர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறலாம். தகுதியுள்ள பொறியியல் பட்டதாரிகள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களை இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x