Published : 06 Aug 2017 03:22 PM
Last Updated : 06 Aug 2017 03:22 PM

வீட்டிலும் கம்பீரமாக இருக்கலாம்!

வீ

ட்டு விழாக்களுக்கும் திருவிழாக்களுக்கும் எப்படி பார்த்துப் பார்த்து உடையணிகிறோமோ அதேபோலத்தான் கடைகள், திரையங்குகள் போன்றவற்றுக்குச் செல்லும் போதும் உடையணிய வேண்டும். போகிற இடத்துக்கு ஏற்ப உடையணிவது அவசியம். வெளியே கிளம்புகிறோம் என்ற ஆர்வத்திலேயே பலர் தங்கள் உடைகளில் கவனம் செலுத்துவதில்லை. சின்னச் சின்ன விஷயங்களைக்கூட மறந்துவிடுவார்கள்.

திடீரென திட்டமிடப்படும் பயணத்துக்கு எளிய சுடிதார் ரகங்களை அணியலாம். கணக்கில்லாமல் பட்டன்கள் வைத்த குர்தாக்களையும் ஆங்காங்கே முடிச்சுகள் வைத்த ஆடைகளையும் தவிர்ப்பது புத்திசாலித்தனம். அணிகலன்களையும் அளவோடு அணியுங்கள்.

ஆற அமர உட்கார்ந்து அலங்காரம் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். ஆடம்பரமான சிகையலங்காரம் நேரத்தைக் கொல்லும் என்பதால் எளிமையாகத் தலைசீவிக்கொள்ளுங்கள்.

அலுவலகத்தில் உங்கள் மதிப்பீட்டைத் தீர்மானிப்பதில் உங்கள் ஆடைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அணிந்து செல்கிற ஆடையை வைத்தே உங்களை எடைபோடுவார்கள். அலுவலகச் சூழலுக்குக் கொஞ்சமும் பொருந்தாத ஆடையை அணிந்து செல்வது, மற்றவர்களின் கவனத்தைத் திசை திருப்புமே தவிர உங்கள் மதிப்பீட்டை உயர்த்தாது.

அலுவலகத்துக்குச் செல்கிறவர்கள்தான் அழகாக உடை அணிய வேண்டும் என்பது பல இல்லத்தரசிகளின் நினைப்பு. இல்லத்தரசியாக இருப்பதாலேயே தேர்ந்தெடுத்து உடையணியத் தேவையில்லை என்ற கருத்து முற்றிலும் தவறு. குடும்பத்துடன் கலந்துகொள்ளக்கூடிய அலுவல் தொடர்பான சந்திப்புகளில் கச்சிதமாக ஆடை அணிவது உங்களைப் பளிச்செனக் காட்டும்.

அலுவலகத்துக்குச் செல்கிறவர்கள் சம்பாதிப்பதால், அவர்கள் மட்டும்தான் விலையுயர்ந்த ஆடைகளை அணிய வேண்டும் என்பதில்லை. இல்லத்தரசிகள் எப்போதாவதுதான் ஆடைக்காகச் செலவிடுவதால், அதை விலையுயர்ந்ததாகவும் ஆடம்பரமானதாகவும் வாங்கலாம்.

-விஷாலி, சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x