Last Updated : 09 Aug, 2017 05:27 PM

 

Published : 09 Aug 2017 05:27 PM
Last Updated : 09 Aug 2017 05:27 PM

பால்கனியில் பல வகை

ழைய ராஜா கதைகளில், ராஜா அரண்மனையின் மேல் தளத்திலுள்ள தாழ்வாரத்தில் தன் மந்திரி, சேவகர் சகிதம் நின்று பொதுமக்களின் குறைகள் கேட்பதை, நீதி வழங்குவதைக் கேட்டிருப்போம். ராணியர் இதேபோன்ற மேல்தளத் தாழ்வாரத்தில் அமர்ந்து ஓய்வெடுப்பதையும் கதையாகக் கேட்டிருப்போம். இந்த மேல்தளத் தாழ்வாரப் பகுதி ‘உப்பரிகை’ என அழைக்கப்படும். இந்தக் கட்டுமானப் பகுதி, இப்போது பால்கனி (Balcony) என்ற ஆங்கிலச் சொல்லாலே அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டுமானப் பகுதி இப்போது கட்டப்படும் பெரும்பாலான வீடுகளின் மேல் தளத்தில் வடிவமைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எல்லாக் கலாச்சாரக் கட்டிடக் கலையிலும் இது வெளிப்பட்டுள்ளது.

ஜூலியட் பால்கனி

03jkr_juliet100right 

மேல்தளத்தின் பால்கனியின் ஆளுயர ஜன்னலை ஒட்டி மிகச் சிறிய அளவில் உருவாக்கப்படும் பால்கனி இது. உலகப் புகழ்பெற்ற இலக்கியக் கர்த்தாவான ஷேக்ஸ்பியரின் ரோமியோ - ஜூலியட் கதையில் ஜூலியட் இதுபோன்ற பால்கனியில் இருக்கும்போதுதான் ரோமியோ, “என்ன ஒளி இந்த ஜன்னலைத் துளைத்து வருகிறது?” எனக் கேட்கிறான். இந்த அடிப்படையில்தான் இந்த பால்கனி ஜூலியட் பால்கனி எனப் பெயர் பெற்றது.

மேசன் பால்கனி

03jkr_Mezzanine100right 

நடுமுற்றம் உள்ள வீடுகளில் அதைச் சுற்றி மேல்தளத்தில் வீட்டின் மையப்பகுதியான நடுமுற்றைத்தை நோக்கி உருவாக்கப்படும் மேல்தளத் தாழ்வாரமே மேசனின் பால்கனி. வீட்டுக்குள்ளே அமைக்கப்படும் பால்கனி.

ஃபால்ஸ் பால்கனி

shutterstock_247680586100 

மிகச் சிறிய அளவில் வீட்டுக்கு வெளிச்சத்தையும் காற்றையும் கொண்டுவரக் கூடிய அளவில் அமைக்கப்படுவது. இந்தப் பகுதியில் செடிகள் வளர்த்துக்கொள்ளலாம்.

ட்ரூ பால்கனி

shutterstock_151209317100 

இந்த வகை பால்கனி தனி வீடுகளில் மட்டும் அமைக்கப்படக்கூடியது. மிக அதிகமான இடம் கொடுத்து உருவாக்கக்கூடியது. இந்தப் பகுதியில் தோட்டம் அமைக்கலாம். சோஃபா போடலாம்.

லாகியா பால்கனி

shutterstock_445373911100 

இந்த வகை பால்கனி பழைய கால வீடுகளின் மேல்புறத்தில் காணப்படும் தாழ்வாரத்தை ஒத்தது. பள்ளி, வணிக, அலுவலகக் கட்டிடங்களின் மேல்தளத்தில் வடிவமைக்கப்படும் தாழ்வாரத்தைப் போன்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x