Published : 04 Jul 2017 10:35 AM
Last Updated : 04 Jul 2017 10:35 AM

வேலை வேண்டுமா? - சுருக்கெழுத்து படித்தவர்களுக்கு மத்திய அரசுப் பணி

எஸ்.எஸ்.சி. எனப்படும் பணியாளர் தேர்வாணையம் மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களுக்குத் தேவைப்படும் குரூப் சி, மற்றும் குரூப் டி ஊழியர்களைத் தேர்வு செய்கின்றது. இதற்காக அகில இந்திய அளவில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், சுருக்கெழுத்தர் கிரேடு-சி (குரூப்-பி பதவி), சுருக்கெழுத்தர் கிரேடு-டி (குரூப்- சி பதவி) உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எத்தனை காலியிடங்கள் என்ற விவரம் தற்போது அறிவிக்கப்படவில்லை.

தேவையான தகுதி

சுருக்கெழுத்தர் (ஸ்டெனோகிராபர்) தேர்வுக்கு பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சுருக்கெழுத்து தெரிந்திருக்க வேண்டும். வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மைனஸ் மதிப்பெண் உண்டு

முதலில் எழுத்துத் தேர்வும் அதில் வெற்றிபெறுவோருக்குச் சுருக்கெழுத்துத் தேர்வும் (Skill Test) நடத்தப்படும். ஆன்லைன் வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் பொது அறிவு, ரீசனிங், பொது ஆங்கிலம் ஆகிய 3 பகுதிகளிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். தவறான பதிலுக்கு மைனஸ் மதிப்பெண் உண்டு. 4 கேள்விகளுக்குத் தவறாக விடையளித்திருந்தால் ஒரு மதிப்பெண் மைனஸ் செய்யப்படும். தகுதியுள்ள நபர்கள் எஸ்.எஸ்.சி. இணையதளத்தில், http://ssconline.nic.in/ ஜூலை மாதம் 15-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வுக்கட்டணம் போன்ற இதர விவரங்களை எஸ்.எஸ்.சி. இணையதளத்தில் ( >http://www.ssc.nic.in/) விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x