Published : 24 Jul 2017 11:59 AM
Last Updated : 24 Jul 2017 11:59 AM

சந்திரகேகரன் வரவால் வந்த மாற்றம்

டாடா சன்ஸ் குழுமத் தலைவராக முதல் முதலில் டாடா குடும்பத்துக்கு வெளியிலிருந்து நியமிக்கப்பட்டவர் என்.சந்திரகேகரன். இதற்கு முன்பு தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரியின் வெளியேற்றத்துக்கு பின்னர் பிப்ரவரி மாதம் பொறுப்புக்கு வந்தவர்.

குழுமத்தின் ஒரு அங்கமான டிசிஎஸ்-இன் தலைவராக இருந்த இவரை , 10,300 கோடி டாலர் மதிப்பு கொண்ட டாடா சன்ஸ் நிறுவனங்களுக்கு தலைவராக்க இயக்குநர் குழு முடிவு செய்தது. அவரது தலைமையின் கீழ் டாடா சன்ஸ் குழுமத்தில் நிகழ்ந்த , நிகழும் மாற்றங்கள் குறித்த பார்வை...

டாடா சன்ஸ் தலைவராக கலந்து கொண்ட முதல் இயக்குநர் குழு கூட்டம் பிப்ரவரி 21 .

நான்கு மாதங்களில் 3 முறை இயக்குநர் குழு கூட்டம் கூட்டியிருக்கிறார்.

சம்பளம்

# ஆண்டு சம்பளம் மற்றும் ஊக்கத் தொகைகள் 3 மடங்கு உயர்வு

# டாடா சன்ஸில் ஆண்டு சம்பளம் : ரூ.7.8 கோடி முதல் 15.6 கோடி வரை

# டிசிஎஸ்-இல் வாங்கிய ஆண்டு சம்பளம் ரூ.5.14

உத்திகள்

# நிறுவன ஒருங்கிணைப்பு

# நஷ்டத்தில் இயங்கும் தொழில்கள் விற்பனை

# சமரச தீர்வுகள்

# டாடா குழும நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்வதை குறைப்பது

# ஊழியர் படிநிலைகளை 5 ஆக குறைப்பு

# குழுமத்தின் 5 (டிசிஎஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், இந்தியன் ஹோட்டல்ஸ், டாடா பவர் ) பெரிய நிறுவனங்களை தவிர இதர நிறுவனங்களை ஆறு பிரிவின் கீழ் ஒருங்கிணைப்பது

1.தகவல் தொடர்பு மற்றும் ஐடி

2.நுகர்வோர் மற்றும் சில்லரை வர்த்தகம்

3.ரியால்டி மற்றும் கட்டுமானம்

4.சேவைத்துறை

5.விவசாயம் மற்றும் ரசாயனத் துறை

6.நிதிச்சேவை

நெருக்கமான குழு

# தனக்கு கீழ் 5 நபர்கள் கொண்ட நெருக்கமான குழுவை உருவாக்கினார். இதற்காக புதியவர்களை பணியமர்த்தினார்.

# அமெரிக்க மெரில் லிஞ்ச் வங்கியில் பணியாற்றிய அருண் வர்மா, ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கியில் பணியாற்றிய நிபுன் அகர்வால்

# டிசிஎஸ் நிறுவனத்தின் நிதித் துறையில் இருந்த சுப்ரகாஷ் முகோபாத்தியாய இவர்கள் மூவரையும் டாடா சன்ஸ்-இல் பணியமர்த்தினார்

# இவர்கள் தவிர டாடா சன்ஸின் தலைமை நிதி அதிகாரி சவுரவ் அகர்வால், நிறுவன சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சுவா மண்டல் ஆகிய ஐந்து நபர்கள் கொண்டது இந்த குழு.

சத்தமில்லாத வேலைகள்

# நஷ்டத்தில் இயங்கும் இங்கிலாந்து ஸ்டீல் நிறுவனத்திலிருந்து வெளியேறும் முடிவு.

# மாற்று எரிசக்தி துறை வெல்ஸ்பன் நிறுவனத்தை ரூ.10,000 கோடிக்கு கையகப்படுத்தியது.

# இரண்டு ஆண்டுகளாக நீடித்த டோமோகோ நிறுவன சிக்கலை தீர்த்தார். 118 கோடி டாலருக்கு டொகோமொ பங்குகளை வாங்க ஒப்புதல்.

# டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகளை 16,000 கோடிக்கு திரும்ப வாங்கியது.

# குஜராத் மாநிலம் முந்த்ரா மின் உற்பத்தி ஆலையில் 51 சதவீத பங்குகள் விற்பனை. 49 சதவீத பங்குகளை நிறுவனம் வைத்துள்ளது.

ஒரே நிறுவனமாக்கும் திட்டம்

உதாரணம்: # டாடா பைனான்ஸ் + டாடா ஹவுசிங் பைனான்ஸ் = டாடா கேபிடல் பைனானஸ்

# டாடா டெலிசர்வீசஸ் + டாடா டெலிசர்வீசஸ் ( மஹாராஷ்டிரா) + டாடா கம்யூனிகேஷன்ஸ்

# டாடா ரியாலிட்டி + டாடா ஹவுசிங்

# டாடா குளோபல் பீவரேஜஸ் + டாடா காபி

கிராஸ் ஹோல்டிங்க்ஸ் சீரமைப்பு திட்டம்

# டாடா கம்யூனிகேஷன் நிறுவனத்தில் டாடா பவர் நிறுவனம் ரூ.1,000 கோடி பங்கு வைத்துள்ளது

# டாடா குளோபல் பீவரேஜ் மற்றும் டைட்டன் நிறுவனங்களில் டாடா கெமிக்கல் ரூ.700 கோடி முதலீடு செய்துள்ளது.

# அதுபோல டாடா குளோபல் பீவரேஜ் நிறுவனம் டாடா கெமிக்கல் நிறுவனத்தில் ரூ.700 கோடி முதலீடு செய்துள்ளது.

இது போன்ற கிராஸ் ஹோல்டிங்ஸ்களை மறுசீரமைக்க திட்டம்.

ஆறு நிறுவன திட்டம்

1. தகவல் தொடர்பு மற்றும் ஐடி

நெல்கோ

டாடா கிளாஸ் எட்ஸ்

டாட கம்யூனிகேஷன்ஸ்

டாடா எலக்ஸி

டாடா இண்டராக்டிவ் சிஸ்டம்ஸ்

டாடா டெலிசர்வீசஸ்

டாடா டெலிசர்வீசஸ் மஹாராஷ்டிரா

டாடா நெட்

2. நுகர்வோர் மற்றும் சில்லரை வர்த்தகம்

காசா டெகோர்

இன்பினிடி ரீடெய்ல்

லேண்ட் மார்க்

டாடா ஏஜி

டாடா குளோபல் பீவரேஜஸ்

டாடா காபி

டாடா ஸ்கை

டாடா யுனிஸ்டோர்

டைட்டன் கம்பெனி

டெரண்ட்

3. ரியால்டி மற்றும் கட்டுமானம்

அஸோஸியேட்டட் பில்டிங் கம்பெனி

ஜெஸ்கோ

பவர்லிங் டிரான்ஸ்மிஷன்

டாடா கன்சல்டிங் இன்ஜினீயர்ஸ்

டாடா ஹவுசிங் டெவலெப்மெண்ட் கம்பெனி

டாடா புராஜெக்ட்ஸ்

டாடா ரியாலிட்டி அண்ட் இன்ப்ராஸ்ட்ரெசர்

டிஆர்எப்

வோல்டா

4. சேவைத்துறை

எம்ஜங்சன் சர்வீசஸ்

ரூட்ஸ் கார்ப்பரேஷன்

தாஜ் ஏர்

டாடா ஆப்ரிக்கா ஹோல்டிங்ஸ்

டாடா பிசினஸ் எக்ஸலன்ஸ் குரூப்

டாடா பிசினஸ் சப்போர்ட் சர்வீசஸ்

டாடா லிமிடெட்

டாடா இண்டர்நேஷனல் ஏஜி

டாடா என் வொய் கே

டாடா சர்வீசஸ்

டாடா எஸ் ஐ ஏ ஏர்லைன்ஸ்

டாடா ஸ்டேடஜிகல் மேஜேன்மெண்ட் குரூப்

டிகேம் குளோபல் லாஜிஸ்டிக்ஸ்

டிஎம் இண்டர்நேஷ்னல் லாஜிஸ்டிக்ஸ்

5. விவசாயம் மற்றும் ரசாயனத் துறை

டாடா கெமிக்கல்ஸ்

டாட கெமிக்கல் யூரோப்

டாடா கெமிக்கல்ஸ் மஹடி

டாடா கெமிக்கல்ஸ் நார்த் அமெரிக்கா

டாடா இண்டர்நேஷ்னல்

ராலிஸ் இந்தியா

6. நிதிச்சேவை

டாடா ஏஐஏ லைப் இன்ஷூரன்ஸ்

டாடா ஏஐஜி ஜென்ரல் இன்ஷூரன்ஸ்

டாட அசெட் மேனேஜ்மெண்ட்

டாடா கெபிடல்

டாடா இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x