Published : 31 Jul 2017 12:11 PM
Last Updated : 31 Jul 2017 12:11 PM

வெற்றி மொழி: மார்கஸ் அரேலியஸ்

121 ஆம் ஆண்டு முதல் 180 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த மார்கஸ் அரேலியஸ் ரோம் பேரரசர் மற்றும் மிகச்சிறந்த தத்துவஞானி. வளமான மற்றும் பிரபலமான குடும்ப பின்னணியைக் கொண்டவர் மற்றும் சிறுவயதிலேயே மிகுந்த அர்பணிப்பு உணர்வுடன் திகழ்ந்தார். மனம் மற்றும் எண்ணம் குறித்த இவரது போதனைகள் பெரும் புகழ்பெற்றவை. தனது ஆட்சி நிர்வாகத்தில் சட்ட நுணுக்கங்களின் மீது அதீத ஆர்வமுடையவராகவும், சிறந்தும் விளங்கினார். ரோமானிய வரலாற்றில் மிகவும் மரியாதைக்குரிய பேரரசர்களில் ஒருவராகப் போற்றப்படுவதோடு, இவரது பொற்கால ஆட்சியானது பல தலைமுறைகளுக்கு அடையாளமாக இருந்ததாக வரலாறு கூறுகின்றது.

 

# மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மிகச்சிறிய விஷயமே தேவை; அது உங்கள் சிந்தனையின் வழியில் உங்களுக்குள்ளேயே உள்ளது.

# உங்கள் மனதிலேயே சக்தி இருக்கிறது, வெளிப்புற நிகழ்வுகளில் இல்லை.

# மனதின் ஆற்றலை சரியாக உணர்ந்து கொள்ளுங்கள், நீங்கள் வலிமை பெறுவீர்கள்.

# ஆத்மாவானது அதன் சிந்தனைகளின் வண்ணத்தால் ஆனது.

# ஒரு நல்ல மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று வாதிடுவதில் இன்னும் நேரத்தை வீணடிக்காதே. நல்ல மனிதனாக இரு.

# உங்கள் காயத்தின் உணர்வினை நிராகரியுங்கள், காயம் தானாக மறைந்துவிடும்.

# உங்கள் வாழ்க்கையின் சந்தோஷம், உங்கள் எண்ணங்களின் தரத்தைச் சார்ந்திருக்கிறது.

# ஒவ்வொரு நாளும் அதன் சொந்த பரிசுகளை வழங்குகிறது.

# ஒரு மனிதனின் மதிப்பு அவனது குறிக்கோள்களை விட பெரியது அல்ல.

# ஒரு விஷயம் உங்களுக்கு கடினமாக இருப்பதால், அதை யாராலும் சாதிக்க முடியாது என்று நினைக்காதீர்கள்.

# மரணம், பிறப்பை போன்றே இயற்கையின் ரகசியமாகும்.

# கோபம் நேர்மையற்றதாக இருக்க முடியாது.

# வறுமையே குற்றத்தின் தாய்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x