Published : 17 Jul 2017 10:44 AM
Last Updated : 17 Jul 2017 10:44 AM

வெற்றி மொழி: லார்ட் பைரன்

1788 ஆம் ஆண்டு முதல் 1824 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த லார்ட் பைரன் ஒரு ஆங்கில கவிஞர், புரட்சியாளர் மற்றும் அரசியல்வாதி. மிகச்சிறந்த ஐரோப்பிய மற்றும் ஆங்கில கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். சுதந்திரத்திற்கான கிரேக்கப் போரில் பங்குபெற்றமையால், கிரேக்க மக்களிடையே இவர் ஒரு தேசிய வீரராகப் போற்றப்பட்டார். 36 ஆண்டுகளே வாழ்ந்தாலும் ஆடம்பரம், அதிகப்படியான காதல்கள், வதந்திகள், பிரிவுகள், கடன்கள் என பலவற்றால் நிறைந்திருந்தது இவரது வாழ்க்கை. ஆங்கில மொழி பேசும் நாடுகள் மட்டுமின்றி, மற்ற நாடுகளிலும் இவரது படைப்புகள் இன்றும் செல்வாக்கு மிக்கவையாக விளங்குகின்றன.

# நான் மனிதரை குறைவாக நேசிக்கவில்லை, ஆனால் இயற்கையை அதிகமாக நேசிக்கிறேன்.

# எப்போதெல்லாம் உங்களால் முடியுமோ அப்போதெல்லாம் சிரியுங்கள். சிரிப்பு ஒரு மலிவான மருந்து.

# சத்தியத்திற்கான முதல் பாதையாக சகிப்புத்தன்மை இருக்கிறது.

# வாழ்க்கையில் தாமதமாக வரும்போது காதல் மிகவும் ஆபத்தானது.

# மர்மம் எங்கே இருக்கிறதோ, அது பொதுவாக தீயதாக இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

# ஓய்வில்லாமல் உழைக்கும்போது கண்ணீருக்கு நேரம் இல்லை.

# உண்மை எப்போதும் வித்தியாசமானது.

# எதிர்காலத்தின் மிகச்சிறந்த தீர்க்கதரிசி கடந்தகாலம்.

# ஒரு துளி மை ஒரு மில்லியன் சிந்தனைகளை உருவாக்கலாம்.

# மிகச்சிறந்த காரியத்தில் மரணித்தவர்கள் ஒருபோதும் தோற்பதில்லை.

# ஒரு வடு இல்லாமல் எந்த ஆழ்ந்த காயங்கள் மறைந்திருக்கின்றன?

# மகிழ்ச்சியைப் பெறவேண்டுமானால், அதைக் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

# பாதையற்ற காடுகளில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது, தனிமையான கடற்கரையில் ஒரு பேரானந்தம் இருக்கிறது.

# சிந்தனையின் ஆற்றல் மனதின் மாயவித்தை.

# மனிதர்களுக்கு காதுகள் இருந்தால், எல்லாவற்றிலும் இசை இருக்கிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x