Last Updated : 12 Jul, 2017 11:30 AM

 

Published : 12 Jul 2017 11:30 AM
Last Updated : 12 Jul 2017 11:30 AM

நீங்களே செய்யலாம்: குதிக்கும் டால்பின்!

1. 3 X 5 அங்குல அளவுள்ள இரண்டு அட்டைகளை எடுத்துக்கொண்டு, இரண்டையும் பசை தடவி ஒட்டுங்கள்.

2. படம் 1, 2-ல் காட்டியபடி முன்பக்கம் டால்பினையும் பின் பக்கம் நீள்வட்டத்தையும் வரைந்துகொள்ளுங்கள்.

3. படம் 3-ல் காட்டியபடி அட்டையின் இடது, வலது பக்கங்களின் ஓரத்தில் சிறு துளையிட்டு, அதில் தடிமனான நூலைக் கட்டிக்கொள்ளுங்கள்.

4. பம் 4-ல் காட்டியபடி இரண்டு நூல்களையும் நடுவிரல்களில் மாட்டிக்கொள்ளுங்கள். கட்டை விரல்கள், ஆட்காட்டி விரல்களால் அட்டையை முடிந்தவரை மேலும் கீழுமாக முறுக்குங்கள்.

5. படம் 5-ல் காட்டியபடி வலது, இடது புறமாக இழுக்கவும். அட்டைச் சுற்றத் தொடங்கும். டால்பின் வளையத்துக்குள் சென்று திரும்புவதுபோல தோற்றம் தரும். விளையாடி மகிழுங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x