Published : 13 Jun 2017 08:52 AM
Last Updated : 13 Jun 2017 08:52 AM

வேலை வேண்டுமா? - தமிழ்நாடு வீட்டுவசதி வாரியப் பணி

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் வீட்டுவசதித் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. தமிழகம் முழுவதும் புதிய வீட்டுவசதித் திட்டங்கள் உருவாக்கப்பட்டு உயர் வகுப்பினர், நடுத்தர வகுப்பினர், குறைந்த வருவாய்ப் பிரிவினர் என 3 பிரிவுகளில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சுயநிதித் திட்டத்தின் குடிமைப்பணித் தேர்வில் பெண்கள் ஹாட்ரிக் சாதனைஅடிப்படையில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன.

உதவிப் பொறியாளர், சர்வேயர், இளநிலை வரைவு அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகிய பதவிகளை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்குத் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதற்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் எழுத்துத் தேர்வு மூலமாகத் தகுதியான நபர்கள் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.

தேவையான தகுதி

உதவிப் பொறியாளர் பணிக்கு பி.இ. (சிவில் இன்ஜினீயரிங்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களும், தட்டச்சர் பணிக்கு எஸ்.எஸ்.சி. கல்வித் தகுதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தொழில்நுட்பக் கல்வித் தகுதி அவசியம். சர்வேயர், இளநிலை வரைவு அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பணிகளுக்கு அதற்குரிய தொழில்நுட்பக் கல்வித் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 30 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது பொதுப்பிரிவினருக்கானது ஆகும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி.) வயது வரம்பு 35. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் வீட்டுவசதி வாரியத்தின் இணையதளத்தை (www.tnhb.tn.gov.in) பயன்படுத்தி ஜூன் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விரிவான கல்வித் தகுதி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் தகுதிகள், தேர்வுமுறை, பாடத்திட்டம், தேர்வு தேதி, தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்களை வீட்டுவசதி வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x