வேலை வேண்டுமா?- வங்கி அதிகாரியாக ஒரு வாய்ப்பு

வேலை வேண்டுமா?- வங்கி அதிகாரியாக ஒரு வாய்ப்பு
Updated on
2 min read

கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட இந்திய வங்கிகளில் அதிகாரிகள், மேலாண்மைப் பயிற்சியாளர் போன்ற பணிகளுக்காக, மொத்தமாக உள்ள 8,822 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை வங்கிப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நிறுவனம் (IBPS) நடத்த இருக்கிறது. இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 26.07.2016 முதல் 13.08.2016-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு:

02.07.1986-லிருந்து 01.07.1996-க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 01.07.2016 அன்று 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. (நான் கிரீமி லேயர்) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.

கல்வி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.100, பிறருக்கு ரூ.600. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

>http://www.ibps.in/ என்னும் இணைய முகவரியில் 26.07.2016 முதல் 13.08.2016 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முதல் நிலைத் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்குப் பிரதான தேர்வு நடத்தப்படும், அதன் பின்னர் நேர்காணல் நடைபெறும். அனைத்திலும் வெற்றிபெற்றவர்கள் பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வுக்கான பயிற்சிகளும் வங்கிகளால் அளிக்கப்படுகின்றன.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க இறுதி நாள்: 13.08.2016.

தேர்வு நுழைவுச் சீட்டு: அக்டோபர் 2016

எழுத்துத் தேர்வு நாள்: 16.10.2016, 22.10.2016, 23.10.2016.

பட்டதாரிகளுக்குப் பாதுகாப்புத் துறையில் வேலை

பாதுகாப்புத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த தேர்வை நடத்துகிறது. மொத்தம் 413 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் 16.07.2016 முதல் 12.08.2016 வரை விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

02.07.1993-லிருந்து 01.07.1998-க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 01.07.2016 அன்று 20 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கலை அறிவியல் பாடங்களிலோ பொறியியலிலோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:

ரூ.200 எஸ்பிஐ வங்கியில் பணமாகவோ அதன் இணைய வங்கிச் சேவை மூலமாகவோ கட்ட வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும் பெண்களுக்கும் கட்டணமில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

>http://www.upsconline.nic.in என்னும் இணைய முகவரியில் 16.07.2016 முதல் 12.08.2016 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு, ஆளுமைத் திறன், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க இறுதி நாள்: 12.08.2016 இரவு 11:59 வரை.

வங்கியில் பணம் கட்ட இறுதி நாள்: 11.08.2016

ஆன்லைனில் பணம் கட்ட இறுதி நாள்: 12.08.2016

தேர்வு நுழைவுச் சீட்டு: தேர்வுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் இணையதளத்தில் கிடைக்கும்.

எழுத்துத் தேர்வு நாள்: 23.10.2016

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in