Published : 27 Mar 2017 10:15 AM
Last Updated : 27 Mar 2017 10:15 AM

அனைவருக்கும் வங்கிச் சேவை

இந்தியா சுதந்திரம் அடைந்து இவ்வளவு காலம் ஆன பிறகும், கிராமப்புற, பழங்குடி இன மக்கள், ஏழைகள் போன்றவர்களுக்கு வங்கிச் சேவைகள் முழுமையாக சென்றடைவில்லை. ஒரு நாட்டில் குடிமக்கள் அனைவரும் வங்கிச் சேவைகளை பயன்படுத்தினால்தான் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதோடு அனைத்து மக்களுக்கும் கடன் வசதி, ஊழல் இல்லா நிர்வாகம் போன்றவற்றையும் உருவாக்க முடியும். இதுபோன்ற சூழலை இந்தியாவில் ஏற்படுத்தும் பொருட்டு `அனைவருக்கும் வங்கிச் சேவை’ என்ற இலக்கை நோக்கி இந்தியா தற்போது நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

2005-ம் ஆண்டே இதற்கான விதையை போட்டாலும் பிரதமர் மோடி `இந்தியாவில் நிதித் தீண்டாமை நிலவுகிறது. இதை ஒழிக்க வேண்டும்’ என்று கூறி ஜன் தன் யோஜனாவை கொண்டு வந்தார். உலகளவிலும் அனைவரையும் வங்கிச்சேவைக்குள் கொண்டுவருவதற்கு உலக வங்கி, வங்கிச் சேவைக்கான கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் கொள்கை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்தத் திட்டத்திற்கு உதவி செய்து வருகின்றன. அனைவருக்கும் வங்கிச் சேவை பற்றிய சில தகவல்கள்….

> உலகம் முழுவதும் வங்கி கணக்கில்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை 200 கோடி

> 2014-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை 43.22 கோடி

உள்ளடக்கிய நிதிக் குறியீடு

அனைவரையும் உள்ளடக்கிய வங்கிச் சேவை இந்தியாவில் எந்த அளவில் உள்ளது என்பதை பட்டியலிட இந்த குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த குறியீட்டை வெளியிடும் அமைப்பு கிரைசில்

> 2013-ம் ஆண்டு விவரத்தின் படி இந்தியாவின் உள்ளடக்கிய நிதிக் குறியீடு 50.1

> உள்ளடக்கிய நிதிக் குறியீட்டில் முன்னணியில் உள்ள மாநிலங்கள் புதுச்சேரி, சண்டீகர், கேரளா

> வங்கிச் சேவை அல்லாதவர்களை 2020-ம் ஆண்டுக்குள் வங்கி அமைப்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று உலக வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.

> இதற்காக 2007-ம் ஆண்டு முதல்கட்டமாக உலக வங்கி ஒதுக்கிய தொகை 1.8 கோடி டாலர்

2014-ம் ஆண்டின்படி வங்கிச் சேவை கிடைக்காதவர்களின் பங்கு

இந்தியா – 20.6 சதவீதம்

சீனா – 11.6 சதவீதம்

இந்தோனேசியா- 5.6 சதவீதம்

பாகிஸ்தான் – 5.2 சதவீதம்

வங்கதேசம் – 3.7 சதவீதம்

நைஜீரியா – 2.7 சதவீதம்

மெக்ஸிகோ – 2.6 சதவீதம்

எகிப்து – 2.4 சதவீதம்

வங்கிச் சேவைக்கான கூட்டமைப்பு

> வளரும் நாடுகளில் அனைவரும் உள்ளடக்கிய வங்கிச் சேவையை அளிக்கும் நோக்கில் கொள்கையை உருவாக்குவதற்காக இந்த அமைப்பு கொண்டுவரப்பட்டது.

> இந்த அமைப்பு கொண்டுவரப்பட்ட ஆண்டு 2008

> பில் அண்ட் மெலிண்டா என்ற தன்னார்வ தொண்டு அமைப்பால் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

> இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 89

> 2011-ம் ஆண்டு இந்த அமைப்பு மாயா பிரகடனத்தை அறிவித்தது. இதை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக் கொண்டன. இந்த பிரகடனத்தின்படி அனைவரையும் வங்கி சேவைக்குள் கொண்டு வருவதன் மூலம் ஏழ்மையை ஒழிக்கவும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நசிகேத் மோர் கமிட்டி

> இந்தியாவில் ஒருங்கிணைந்த வங்கி சேவைகளை அளிக்கும் நோக்கத்துடன் 2013-ம் ஆண்டு நசிகேத் மோர் கமிட்டி அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் அமைக்கப்பட்டது.

> இந்த கமிட்டியின் தலைவர் நசிகேத் மோர். இந்த கமிட்டி 2014-ம் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தது.

பரிந்துரைகள்

> உலகளாவிய மின்னணு வங்கி கணக்கு

> அனைவருக்கும் கடன் வசதி

> அனைவருக்கும் காப்பீடு வசதி

> நுகர்வோர் பாதுகாப்பு

> இந்தியாவில் முதன் முதலில் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்ட கிராமம் மங்களம், புதுச்சேரி

ஜன் தன் யோஜனா

> இந்தியாவில் அனைவருக்கும் வங்கிச்சேவை அளிக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட திட்டம் ஜன் தன் யோஜனா.

> இந்த திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு 2014

> இதுவரை இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 28.02 கோடி

> இதுவரை இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள ரூபே கார்டுகளின் எண்ணிக்கை 21.90 கோடி

> ஜன் தன் வங்கி கணக்குகளில் மொத்த இருப்புத் தொகை ரூ. 63,836 கோடி

> தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஜன் தன் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 86,65,853

> அனைவருக்கும் வங்கிச்சேவை என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒய்.வி.ரெட்டி.

> இந்த வார்த்தை முதன் முதலில் 2005-2006-ம் ஆண்டு ஆர்பிஐயின் வருடாந்திர கொள்கை கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

> 2020-ம் ஆண்டுக்குள் 60 கோடி வங்கி கணக்குகளை தொடங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.

வளரும் நாடுகளில் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை

2014 – பெண்கள் – 50 சதவீதம்

2014- ஆண்கள் – 58 சதவீதம்

அனைவரையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவர இந்திய அரசின் திட்டங்கள்

பாரதிய மகிளா வங்கி

முத்ரா யோஜனா

மைக்ரோ ஃபைனான்ஸ்

பேமெண்ட் வங்கிகள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x