Published : 16 Jan 2017 11:35 AM
Last Updated : 16 Jan 2017 11:35 AM

ஈரானுக்கு கிடைத்த முதல் விமானம்!

37 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரான் நாட்டுக்கு முதல் பயணி கள் விமானம். கடந்த வார சர்வதேச நாளிதழ்களில் இடம்பிடித்த தலைப்புச் செய்திகளுள் ஒன்று. ஆனால் இதை ஒரு செய்தியாக மட்டும் உங்களால் கடந்து போக முடியாது. அதன் பின் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.

1979-ம் ஆண்டு அணுசக்தியை தவறான வழிகளில் பயன்படுத்துவ தாக எழுந்த புகாரை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அதுமட்டுமல்லாமல் 1995-ம் ஆண்டு நிறுவனங்களும் ஈரான் அரசுடன் எந்த ஒப்பந்தங்களும் செய்யக்கூடாது என்று பொருளா தார தடையை விரிவுபடுத்தியது. அமெரிக்கா மட்டுமல்லாமல் ஐரோப் பிய ஒன்றியமும் ஈரான் மீது பொரு ளாதார தடையை விதித்தன.

இதனால் பல்வேறு நாடுகளின் வங்கி களில் ஈரான் வைத்திருந்த 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகளும் முடக்கப் பட்டன. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயை விற்க முடியாத நிலைக்கும் ஈரான் தள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நிறுவனங் களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாத நிலையால் பயணிகள் விமா னங்களை வாங்க முடியாத நிலை ஈரானுக்கு ஏற்பட்டது. இதனால் 1979ம் ஆண்டு முதல் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்திலும் இழுபறி நீடித்து வந்தன.

கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி அமெரிக்கா, இங்கி லாந்து, ரஷியா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய உலகின் 6 முக்கிய நாடுகளுடன் அணுசக்தி தொடர்பாக ஈரான் ஒப்பந்தம் செய்து கொண்டது. எனினும் ஈரான் மீதான தடை உட னடியாக நீக்கப்படவில்லை. அதன் பிறகு ஈரான் ஒருபோதும் அணு ஆயு தங்களை தயாரிக்கப்போவதில்லை என்று உறுதி அளித்து இருப்பதாலும், சர்வதேச அணுசக்தி முகமையின் ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டு நடப் போம் என்று உத்தரவாதம் அளித்து இருப்பதாலும் அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டு இருந்த தடைகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன என்று தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா. அதுமட்டுமல்லாமல் ஈரான் மீது விதிக்கப்பட்டு இருந்த தடைகளை நீக்கும் வகையிலான அதிகாரப்பூர்வ உத்தரவிலும் கையெழுத்திட்டார்.

ஈரானிடம் வர்த்தக ரீதியில் செயல் படும் 250 விமானங்களில் பெரும் பாலானவை பழமையானவை. அவை அனைத்தும் 1979-ஆம் ஆண் டுக்கு முன்பு வாங்கப்பட்டவை. கடந்த ஜூன் மாத நிலவரப்படி 162 விமானங்கள் மட்டுமே செயல் பாட்டில் உள்ளன. எஞ்சியுள்ள விமானங்கள் உதிரிபாக பற்றாக் குறையால் சரிசெய்ய முடியாமல் வீணாக நிறுத்தி வைக்கப்பட் டுள்ளன. ஈரான் ஏர் நிறுவனத்திடம் 43 விமானங்கள் உள்ளன இதன் மூலம் லண்டன் உள்ளிட்ட 30 சர்வதேச நகரங்களுக்கு நேரடி விமான சேவை வழங்கி வருகிறது.

பொருளாதார தடை நீக்கப்பட்டவுடன் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தினமும் 5 லட்சம் பீப்பாய் வீதம் விரைவில் அதிகரிக்க ஈரான் முடிவு செய்தது. அதுமட்டுமல்லாமல் பய ணிகள் போக்குவரத்துக்காக அமெ ரிக்காவின் போயிங் நிறுவனத்திட மிருந்து 80 விமானங்கள் வாங்கும் திட்டத்தை ஈரான் இறுதி செய்தது. பயணிகளின் போக்குவரத்து வசதிக் காக 80 விமானங்களை போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்கத் திட்டமிடப்பட்டது. அதுமட்டுமல் லாமல் பிரான்ஸ் நிறுவனமான ஏர் நிறுவனத்திடமும் 100 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்நிலையில் கடந்த வாரம் ஏர்பஸ் தனது முதல் விமானத்தை ஈரானுக்கு வழங்கியுள்ளது. 180 இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் ஏ321 என்ற விமானம் ஈரானில் தரையிறக்கப்பட்டது. 37 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து இறங்கிய புதிய பயணிகள் விமானத்தை மக்கள் ஆரவாரமாக வரவேற்றனர். ஒரு பொருளாதார தடை என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு ஈரான் மிகச் சிறந்த உதாரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x