Published : 21 Nov 2014 10:46 am

Updated : 21 Nov 2014 10:46 am

 

Published : 21 Nov 2014 10:46 AM
Last Updated : 21 Nov 2014 10:46 AM

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 24

iv-24

வரலாறு-இந்திய சுதந்திர போராட்டம்

676. பக்சார் போரில் இந்திய மன்னர்களைத் தோற்கடித்த ஆங்கிலேய தளபதி யார்? 677. முதல் மராத்திய போர் நடந்தபோது இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?

678. இருப்புப்பாதை மற்றும் தபால்தந்தி முறையின் தந்தை என அழைக்கப்படுவர் யார்? 679. பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக்கப்பட காரணமாக இருந்தவர் யார்?

680. தென்னிந்தியாவில் நடந்த புரட்சியில் பாளையக்காரர்களுக்கு தலைமை ஏற்றவர் யார்?

681. கான்பூர் புரட்சிக்கு தலைமை தாங்கியவர் யார்?

682. விக்டோரியா பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது?

683. சதி என்ற மூடபழக்கவழக்கத்தை சட்டத்தின் மூலம் ஒழித்தவர் யார்?

684. மாகாணங்களில் இரட்டை ஆட்சிமுறையை புகுத்திய சட்டம் எது?

685. முஸ்லிம்களுக்குத் தனித்தொகுதியை அறிமுகப்படுத்தியது எது?

686. பஞ்சாப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?

687. தன்னாட்சி இயக்கத்தில் ஈடுபட்டஇந்தியத்தலைவர்கள் யார்?

688. துருக்கியர்களுக்கு எதிராக பிரிட்டிஷார் செய்த அவமதிப்பு செயலைக் கண்டித்து இந்தியாவில் அலி சகோதரர்கள் ஆரம்பித்த இயக்கம் எது?

689. இடைக்கால அரசில் பிரதமர் பதவி வகித்தவர் யார்?

690. முதல் வட்டமேஜை மாநாடு எப்போது நடந்தது?

691. இந்தியர்கள் 2-ம் உலகப்போரில் ஈடுபட காரணமாக இருந்த ஆங்கில தலைமை ஆளுநர் யார்?

692. இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் அணிக்கு தலைமையேற்று நடத்தியவர் யார்?

693. இந்திய சுதந்திரப் போரில் காந்தியடிகள் காலம் என குறிப்பிடப்படும் காலம் எது?

694. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்?

695. தேசிய கீதத்தை எத்தனை விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்?

696. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் யார்?

697. “இந்தியா இந்தியர்களுக்கே” என்று முழங்கியவர் யார்?

698. வங்கப்பிரிவினைக்கு காரணமாக இருந்தவர் யார்?

699. “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை” என கூறியவர் யார்?

700. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?

701. பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்

702. எல்லை காந்தி என போற்றப்பட்டவர் யார்?

703. “வந்தே மாதரம்” பாடலை பாடியவர் யார்?

704. “எங்கு ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ, அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது” என்று கூறியவர் யார்?

705. மகாத்மா காந்தியின் பிறந்த தினம் எது?

706. பூமிதான இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?

707. தியாகிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

708. இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு அடிகோலியவர் யார்?

709. இந்திய தேசிய காங்கிரஸ் யாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

710. ஹோம் ரூல் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?விடைகள்

676. மேஜர் மன்ரோ 677. வாரன் ஹேஸ்டிங்ஸ் 678. டல்ஹவுசி பிரபு 679. மெக்காலே பிரபு 680. மருது சகோதரர்கள் 681. நானா சாகிப் 682. 1858 683. பெண்டிங் பிரபு 684. மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டம் 685. மிண்டோ-மார்லி சீர்திருத்தம் 686. ரிப்பன் பிரபு 687. மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் 688. கிலாபத் இயக்கம் 689. நேரு 690. 1931 691. லிண்லித்தோ பிரபு 692. லட்சுமி 693. 1919 - 1947 694. 1938 695. 52 வினாடிகள் 696. டாக்டர் ராஜேந்திர பிரசாத் 697. அன்னிபெசன்ட் 698. கர்சன் பிரபு 699. பாலகங்காதர திலகர் 700. சுவாமி தயானந்த சரஸ்வதி 701. லாலா லஜபதி ராய் 702. கான் அப்துல் கபார்கான் 703. பங்கிம் சந்திர சட்டர்ஜி 704. சுவாமி விவேகானந்தர் 705. அக்டோபர் 2, 1869 706. வினோபா பாவே 707. ஜனவரி 30 708. ராபர்ட் கிளைவ் 709. 1885-ல் டபிள்யூ.சி. பானர்ஜி 710. அன்னிபெசன்ட் அம்மையார்


டிஎன்பிஎஸ்சி குரூப் - IVமாதிரி வினா விடைவரலாறு-இந்திய சுதந்திர போராட்டம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author