வெற்றி முதல்வர்கள்

வெற்றி முதல்வர்கள்
Updated on
1 min read

சமீபத்தில் நடந்து முடிந்துள்ள மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்று மகாராஷ்ட்ரா மாநிலத்தின் 17வது முதல்வராக தேவேந்திர பத்னாவிஸூம் அரியாணா மாநிலத்தின் 10 வது முதல் மந்திரியாக மனோகர் லால் கட்டாரும் பதவி ஏற்றுள்ளனர்.

பத்னாவிஸ் ( வயது 44) நாக்பூரில் 1970- ல் பிறந்தார். இவரது தந்தை, கங்காதரர் மகாராட்டிர சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்தவர். பத்னாவிஸ் சட்டம் பயின்றவர். 1999 முதல் பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். பத்னாவிஸ் திருமணமானவர். மனைவி தனியார் வங்கியில் பணியாற்றுகிறார். ஒரு மகள் இருக்கிறார்.

அரியாணா வின் முதலமைச்சராக பதவியேற்கும் முதல் பஞ்சாபி சமூகத்தை சேர்ந்தவர் மனோகர்லால் கட்டார் (60) . முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்துள்ளார். திருமணம் ஆகாதவர். அரியாணாவின் ரோதக் மாவட்டத்தின் மகாம் தாலுகாவில் உள்ள நிதனா கிராமத்தில் 1954 ம் ஆண்டு கட்டார் பிறந்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றவர். 1990களில் பா.ஜனதாவில் இணைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in