

வழக்கமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வானது, இந்த ஆண்டு முன்கூட்டியே நடைபெறவுள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட 24 பணிப் பிரிவுகளுக்குக் குடிமைப் பணிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகம் என மூன்று கட்டங்களாகத் தேர்வுகள் நடைபெறும்.
அவற்றில் முதல்நிலைத் தேர்வு ஜூன் 18-ல் நடைபெறும் என மத்தியக் குடிமைப் பணிகள் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதில் மொத்தமாக 980 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த முறைதான் மிகக்குறைவான எண்ணிக்கை கொண்டோருக்கு தேர்வு நடத்தப்படுகிறது. ஆகையால் போட்டி கூடுதலாக இருக்கலாம்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.-க்கு அடுத்தபடியாக ஈர்ப்புக்குரியதாகவும் சவால்மிகுந்ததாகவும் கருதப்படுவது வனப் பணியாகும். அது குறித்த முக்கியத் தகவல்கள் இதோ:
வனப் பணியில் காலியிடங்கள்: 110
பணி: இந்திய வனத்துறை அதிகாரி
தகுதி: கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியமைப்பியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் அல்லது விவசாயம், வனவியல் அல்லது பொறியியல் துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 21 - 32-க்குள் இருக்கவேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, புதுச்சேரி
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்றப் பிரிவினருக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப் பிப்பதற்கான கடைசி தேதி: 17.03.2017
முதல்நிலைத் தேர்வு தேதி: 18.06.2017
ஆன்லைனில் பதிவு செய்ய:>www.upsc.gov.in