Last Updated : 21 Feb, 2017 10:30 AM

 

Published : 21 Feb 2017 10:30 AM
Last Updated : 21 Feb 2017 10:30 AM

ஆங்கிலம் அறிவோமே - 148: கவிதைக்குத் தலைகீழ் அழகு!

கேட்டாரே ஒரு கேள்வி:

Foreshore என்ற வார்த்தையிலும் forensic என்ற வார்த்தையிலும் உள்ள ‘fore’ என்ற பகுதிக்கு அர்த்தம் ஒன்றுதானா?



Pirates என்பதற்கும், primates என்பதற்கும் என்ன வித்தியாசம்?

Pirates என்றால் கடற்கொள்ளை யர்கள். வானொலி, தொலைக் காட்சியில் அதிகார பூர்வ அனுமதியில்லாமல் எதையாவது அறிவிப்பவர்களையும் pirates என்பதுண்டு. ‘ரங் தே பசந்தி’ திரைப்பட உச்சக் கட்டம் நினைவுக்கு வருகிறதா? ‘இந்தியன்’ திரைப்படத்தில் ‘எல்லா நாட்லயும் லஞ்சம் உண்டு. ஆனா அங்கெல்லாம் சட்டத்தை மீறிச் செயல்பட்டால்தான் லஞ்சம். இ ங்கே சட்டப்படி நடப்பத ற்கே லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கு’ என்று கமல் நிழல்கள் ரவியை மிரட்டும் காட்சி?

Primates என்றால் விரல்களால் பொருள்களைப் பிடிக்கும் திறமை கொண்ட பா லூட்டிகள். மனிதர்கள், குரங்குகள், போன்றவற்றை இந்த வகையில் சேர்க்கலாம்.



கேட்டாரே ஒரு கேள்வியில் “Foreshore என்ற வார்த்தையிலும், foretell என்ற வார்த்தையிலும் உள்ள fore என்ற பகுதிக்கு அர்த்தம் ஒன்றுதானா?’’ என்று கேட்டிருந்தால் ஆமாம் என்பது என் பதிலாக இருக்கும். ஆனால், அவர் forensic என்ற வார்த்தையைச் சேர்த்திருக்கிறார்.

Fore என்றால் முன்னால் அல்லது முன்னதாக என்று பொருள். Before என்பதன் சுருக்கம் fore. “Fore you know it, you‘re in trouble’’ என்ற கவிதை வரியில் fore என்பது before என்பதைத்தான் குறிக்கிறது. அதாவது ‘என்ன ஏது என்று உணர்வதற்குள் நீ சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டாய்’ என்பது போன்ற அர்த்தம்.

Foreshore என்றால் மிக ஆழமான நீர்நிலைக்குச் சற்று முன்னதாகக் கரைப்பக்கமாக உள்ள நிலப்பகுதி.

Foretell என்றால் முன்னதாகவே ஒன்றைக் க ணித்துக் கூறுவது. ஜோதிடர்களும், சோழி உருட்டுபவர்களும் இதைத்தான் செய்வதாகக் கூறிக்கொள்கிறார்கள்.

Forearm என்றால் முன்னதாக உள்ள கை அல்லது கால். மனிதர்களுக்கு forearms கிடையாது. கை, கால் எல்லாம் ஒரே தளத்தில்தான் உள்ளன. விலங்குகளுக்கு உள்ள முன்னங்கால்கள்தான் forearms.

ஆனால் கேட்டாரே ஒரு கேள்வியில் இடம்பெற்றுள்ள forensic என்ற வார்த்தைக்கும் fore என்ற பொருள் கொண்ட மேற்படி பகுதிக்கும் சம்பந்தமில்லை. Forensic என்றால் தடய அறிவியல் அது அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்தும் தொழில்நுட்பம் தொடர்பானது. Forensic evidence என்பதுபோல.

Forebode என்றால் ஒரு சூழல் குறித்து முன்னதாகவே எச்சரிப்பது. The dog’s howl foreboded something bad. அதாவது அந்த நாயின் ஊளையிடல் ஏதோ கெடுதல் நடக்கப் போவதை முன்கூட்டியே உணர்த்தியது. The man’s crossing its route foreboded something bad to the cat என்றால் மனிதன் குறுக்கே போனது பூனைக்குக் கெட்ட சகுனமாகப்பட்டது என்று பொருள்.

Foresight என்றால் தொலைநோக்குப் பார்வை. இதைப் பெற telescope-ன் உதவியை நாடலாமா என்று கேட்கக் கூடாது!



Inversion என்றால் என்ன?

ஒன்றைத் தலைகீழாக்குவது inversion. These arguments are inversions of the truth.

வழக்கமான வார்த்தை வரிசைகளை மாற்றி அமைப்பதையும் inversion என்பார்கள். அதாவது சப்ஜெக்ட்டுக்கு முன்பாகவே அதன் verb இடம் பெறுவது.

The balloon went up என்பதை Up went the balloon என்று கூறுவது இப்படித்தான். கவிதைகளில் inversions அ திக அளவில் இடம்பெறும்.



போட்டியில் கேட்டுவிட்டால்?

Marie Curie, one of the best-known ________ in working with radiation, died in 1934.

a) Debutants

b) Revolutionaries

c) Pioneers

d) Debutant

e) Revolutionary

f) Pioneer

Revolutionary என்றால் புரட்சியாளர் என்று பொருள். அது மேற்படி வாக்கியத்தில் பொருந்தவில்லை.

Debutant என்றால் முதல்முறையாக ஒரு பொது நிகழ்ச்சியில் தோன்றுபவர். பெரும்பாலும் விளையாட்டுத் துறையில்தான் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். கிரிக்கெட் விமர்சனத்தில் ‘தனது டெபியூவிலேயே சதமடித்தார்’ என்று கூறுகி றார்களே அந்த டெபியூ என்பது debut என்பதைக் குறிக்கிறது. மேரி க்யூரி விளையாட்டுத் துறையில் ஈடுபட்டவர் அல்ல என்பதால் debutant, debutants ஆகிய வார்த்தைகளை நாம் ஒதுக்கிவிடலாம்.

ஆங்கிலத்தில் one of the என்ற பயன்பாடு வரும்போது அதைத் தொடர்வது பன்மையாகத்தான் இருக்க வேண்டும். One of the students, one of the countries என்பதுபோல. இந்தக் கோ ணத்தில் பார்க்கும்போது debutant மட்டுமல்ல, revolutionary, pioneer ஆகிய வார்த்தைகளையும் நீக்க வேண்டி இருக்கிறது.

ஆக மீதமுள்ள வார்த்தையான pioneers என்பது இங்கு பொருந்துகிறது. Pioneer என்றால் ஒரு துறையில் முதன்முறையாக ஒரு செயல்முறையை உருவாக்குபவர் அல்லது அத்துறையைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குபவர். Pioneer என்பதைத் தமிழில் முன்னோடி என்றும் குறிப்பிடலாம்.

எனவே Marie Curie, one of the best-known pioneers in working with radiation, died in 1934 என்பதுதான் சரி.

சிப்ஸ்

# Offhand என்றால்? முன் தயாரிப்பு இல்லாத.

# நண்பரைத் தொலைபேசியில் தொடர்புகொள்ளும்போது “Number called is engaged. Please try sometime later again” என்ற பதிவு செய்த குரலைக் கேட்கிறேன். இது சரியா?

சரியில்லையென்றால் உங்கள் நண்பரை உங்களுடன் மட்டும்தான் தொலைபேசியில் பேச வேண்டும் என்று கூறிவிடுங்கள். மற்றபடி later என்ற வார்த்தை இடம் பெறும்போது again என்ற வார்த்தை இடம் பெறுவது சரியல்ல.

# Comely என்று ஒரு வார்த்தை இருக்கிறதா? கவர்ச்சிகரமான. அதாவது shapely.

# Made for each other என்பதற்குச் சமமாக வேறு எதைச் சொல்லலாம்?

Perfectly suited.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x