

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் உதவிச் செயற்பொறியாளர், வேதியியலாளர், புவியியலாளர் உள்ளிட்ட 417 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 2016 ஜூலை 28 முதல் 2016 ஆகஸ்டு 10 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளுக்கு கேட் 2016 [Graduate Aptitude Test in Engineering (GATE) 2016] தேர்வு எழுதியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
வயதுத் தகுதி: 01.01.2016 அன்று பொதுப் பிரிவினர் ட்ரில்லிங்/சிமெண்டிங் ஆகிய துறையின் உதவிச் செயற்பொறியாளர் பணிக்குப் பொதுப் பிரிவினர் 28க்குள்ளும் பிற துறையின் பணிக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும்; ஓபிசியினர் 31க்குள்ளும் பிற துறையின் பணிக்கு 33க்குள்ளும் இருக்க வேண்டும்; எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரும் முன்னாள் ராணுவத்தினரும் 33க்குள்ளும் பிற துறையின் பணிக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும். துறைசார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் சலுகைகள் விதிமுறைகளின் படி உண்டு.
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டமும், 60 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். எந்தப் பணிக்கு எந்தப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் போன்ற விவரங்களை இதற்கான அறிவிக்கையில் காணலாம்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் >www.ongcindia.com என்னும் இணையதளத்தில் 28.07.2016 முதல் 10.08.2016 வரை விண்ணப்பிக்கலாம். கேட் 2016 தேர்வின் மதிப்பெண், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முக்கிய நாள்கள்: விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.08.2016
நேர்காணல் நாள் : செப்டம்பர் அக்டோபர் 2016
கூடுதல் விவரங்களுக்கு: >http://goo.gl/6GLlqt