Published : 05 Jan 2014 12:00 AM
Last Updated : 05 Jan 2014 12:00 AM

பொங்கலுக்குப் புதுப்பட்டு

கடந்த 20 ஆண்டுகளாக ‘மேனுவல் மேஜிக்’ என்று சொல்லும் வண்ணம் தரமான பட்டுப்புடவைகளை உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்துவரும் எஸ்.எம் சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி எம். ஞானமூர்த்தி, பட்டுப்புடவையின் சிறப்பை அத்தனை அழகாக விவரிக்கிறார்.

‘‘நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிப்பது சேலைகள்தான். பட்டுச் சேலைகளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. குறைந்தது 6.5 மீட்டர் நீளம் கொண்ட ஒரு சேலையை எந்தவித இணைப்பும் இல்லாமல் அணிந்து கொள்ளும் சிறப்பு நம்மிடம் இருந்துதானே உலகெங்கும் பரவியது. பட்டையும், பெண்ணையும் பிரித்து பார்க்க முடியாத ஒரு பந்தம் நம் ஊரில் இன்னமும் இழையோடிக்கொண்டிருக்கவே செய்கிறது!

“முதலில் உற்பத்தியாளர்கள் என்பதில்தான் முழுமையாக பெருமைப்படுகிறோம். அப்படிப் பயணிப்பதில்தான் வாடிக்கையாளர்களின் மனதை புரிந்துகொண்டு, அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வண்ணம் எங்களால் பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்ய முடிகிறது. ரூ.25000 விலையில் உள்ள சேலையை, அதன் தரம் குறையாமல் ரூ.2500க்குக் கொடுக்கும் உற்பத்தி முறைகளை நாங்களே கையாள முடிகிறது. சின்ன ஃபேக்டரி தான். இருந்தாலும் அதிக உற்பத்தி இருக்கும் இடத்தில் எந்த ஒரு பொருளையும் விலை குறைவாகக் கொடுக்க முடியும். அதை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

‘‘சென்னையில் உள்ள ஒரு வாடிக்கையாளர் 18 ஆண்டுகளுக்கு முன் அவருடைய மகளின் திருமணத்திற்கு பட்டுச்சேலை வாங்கிப்போனார். அன்று தொடங்கியவர் இன்றுவரை எங்கள் நிறுவனத்தில்தான் எந்த சுப நிகழ்வுக்கும் பட்டு வாங்குகிறார். சமீபத்தில் அவரது மகள் வழி பெண்பிள்ளைக்கும் பட்டுச்சேலை வாங்க வந்திருப்பதாக சொன்னபோது, இத்தனை ஆண்டுகளாக இந்தத் தொழிலை செய்வதில் ஓர் அர்த்தம் இருப்பதை உணர்ந்தேன். தலைமுறை கடந்து இன்றும் பட்டுக்கு இருக்கும் வரவேற்பு கொஞ்சமும் குறையவில்லை.

அந்த வகையில் இந்தப் பொங்கல் வரவாக யார்ன் வகை மெட்டீரியல் கொண்டு ‘ஹையர் கிரேடு’ மாடல் பட்டுக்களை அறிமுகம் செய்கிறோம். ஒரு பட்டுச்சேலையின் சிறப்பு அதன் நிறத்தில்தான் இருக்கிறது. ஒவ்வொரு சேலையும் ஒவ்வொரு வண்ணத்தைச் சுமக்க வேண்டும்.

ஒரு நிறத்தில் ஒரு பட்டுச்சேலைதான் இருக்க வேண்டும் என்ற தற்போதைய வாடிக்கையா ளர்களின் விருப்பத்தை அறிந்தும் உற்பத்தி செய்கி றோம். மல்பரி என்னும் பட்டுக்கூட்டின் சுப்பீரியர்ஸ் தரத்தைக் கொடுப்பதுதான் தனித்த அடையாளம்.

அந்த மாதியான சேலைகள்தான் 30, 40 ஆண்டுகளுக்குப் பின்னரும் வண்ணம் குறையாமல் அடர்த்தியான புதுத்தன்மையை பட்டுக்கு கொடுக்கும்!’’ என்று கூறும் ஞானமூர்த்தி, பட்டுப்புடவைகளை பாதுகாக்கும் ரகசியத்தை பகிர்ந்தார்.

‘‘தரமான பட்டை மீண்டும் மீண்டும் அணியும்போதுதான் பளபளப்பு கூடும். பலரும் பட்டை வாங்கி பீரோவில் வைத்து ஆண்டுக்கொரு முறைதான் வெளியே எடுக்கிறார்கள்.

இது தவறு. நம் பாட்டிகள் எல்லாம் தொடர்ந்து பட்டை அணிந்ததால்தான் அன்றைய பட்டு அத்தனை அசத்தலாக இருக்கிறது!’’ என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x