Published : 14 Nov 2013 12:00 AM
Last Updated : 14 Nov 2013 12:00 AM

நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி

நீரிழிவு நோயாளிகளுக்கான இனிப்புகளைத் தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமாக டயாபடிக்ஸ் டிசையர் நிறுவனம் திகழ்கிறது. இந்திய இனிப்புப் பண்டங்களை நீரிழிவு நோயாளிகளைப் பாதிக்காத இனிப்பான ப்ரக்டோஸ்/லெவ்லோஸ் மூலம் தயாரிப்பது அவ்வளவு எளிய விஷயம் அல்ல என்கிறார் இந்நிறுவனத்தின் தலைவரான கே.ராமு. “ புரோட்டின் சத்தைக் கொண்டிருக்கும் இனிப்புப் பொருட்களை ஒரு அளவுக்கு மேல் கொதிக்க வைக்கும்போது, உணவுப்பொருளின் மூலக்கூறுகளுக்குள் வினைமாற்றம் ஏற்படும். இது உடல்நலத்துக்குக் கேடானது. புற்றுநோய் பாதிப்பையும் ஏற்படுத்தலாம். அதனால்தான் இயற்கையான சர்க்கரை தவிர்த்த செயற்கை இனிப்புப் பொருட்களை யாரும் பயன்படுத்தத் துணிவதில்லை.” என்கிறார்.

ப்ரக்டோஸ் இனிப்புடன் லெவுலோசைச் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது என்கிறார் ராமு. ‘மெர் இன்டெக்ஸ்’ வேதியியல் பொருள் தகவல் களஞ்சியத்தினால் லெவுலோஸ் இனிப்புப் பொருள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. லெவுலோஸ் கலந்த இனிப்புப் பண்டத்தை உண்பதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்றும் உடனடியாகச் சக்தியைக் கொடுப்பதாகவும் மெர் இன்டெக்ஸ் தெரிவிக்கிறது.

குறைவான சர்க்கரை அளவுள்ள உணவுகளை விற்பது தொடர்பாக ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ராமுவுக்கு யோசனை வந்தது. அப்போதுதான் இயற்கையான சர்க்கரைக்கு வெற்றிகரமான மாற்றாக லெவுலோஸ் என நிரூபணம் ஆகியிருந்தது. “ உலகப்புகழ் பெற்ற நீரிழிவு மருத்துவர் சேஷையா, இதுதொடர்பான பரிசோதனைகளைச் செய்து தனது ஆய்வுக்கட்டுரைகளைப் புகழ்பெற்ற மருத்துவ இதழ்களான ஆண்டிசெப்டி போன்றவற்றில் எழுதினார். லெவுலோஸ் பயன்பாடு தொடர்பான அத்தனை சந்தேகங்களையும் அந்தக் கட்டுரைகள் தீர்த்துவைத்தன. நீரிழிவு மருத்துவத்தில் புகழ்பெற்ற இன்னொரு மருத்துவரான மோகன், தனது நோயாளிகளுக்கு லெவுலோஸ் கலந்த இனிப்புப் பண்டங்களைக் கொடுத்துப் பரிசோதனை செய்தார். இனிப்புகளைச் சாப்பிட்ட பிறகு அந்த நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரவேயில்லை.” என்கிறார். அத்துடன் சிகிச்சை உணவூட்டம் தொடர்பான அமெரிக்க ஆய்விதழிலும் நூற்றுக்கணக்கான அறிக்கைகளின் ஆதாரத்துடன் லெவுலோசின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்டிருப்பதையும் ராமு சுட்டிக்காட்டுகிறார்.

ஐஎஸ்ஓ 22000 சான்றிதழ் பெற்ற HACCP தர அளவீடுகளையும் பராமரிக்கும் டயாபெடிக்ஸ் டிசையர் நிறுவனம், ஒரு நீரிழிவு நோயாளியின் அன்றாட உணவுத் தேவை அத்தனையையும் நிறைவேற்றுகிறது. காலையில் ரொட்டி உணவுடன் சேர்ந்து சாப்பிட ஆப்பிள் ஜாம் முதல் மதிய உணவுக்குப் பிறகான இனிப்புகள், குக்கீஸ், கேக் மற்றும் தேநீருடன் கொறிக்க மஃபின் என அனைத்தும் இங்கு கிடைக்கின்றன. ஒரு நீரிழிவு நோயாளியின் கனவை நிறைவேற்றும் நிறுவனம் இது. மதிய உணவுக்குப் பிறகு நீரிழிவு நோயாளியும் விருப்பம் போல இனிப்பு சாப்பிடலாம். அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்று அடித்துச் சொல்கிறார் ராமு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x