Published : 16 Sep 2016 01:35 PM
Last Updated : 16 Sep 2016 01:35 PM

டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா-விடை 11: இந்திய அரசியலமைப்பு

1. இந்திய அரசியலமைப்பின் முன்னுரை திருத்தி அமைக்கப்பட்ட ஆண்டு

a) 1950 b)1972 c)1976 d)1978

2. இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப் பட்டுள்ளன?

a) 7-வது அட்டவணை

b) 9-வது அட்டவணை

c) 11-வது அட்டவணை

d) 12-வது அட்டவணை

3. கீழ்க்கண்டவற்றை பொருத்துக

சிறப்பம்சங்கள் - நாடுகள்

A. சட்டத்தின் ஆட்சி- அயர்லாந்து

B. நீதி புனராய்வு- ஆஸ்திரேலியா

C. பொதுப்பட்டியலில் உள்ள கருத்துகள்- அமெரிக்கா

D. அரசின் நெறிமுறை கோட்பாடுகள்- இங்கிலாந்து

A B C D

a) 4 2 3 1

b) 1 2 3 4

c) 2 3 1 4

d) 4 3 2 1

4. 1978-வருடத்திய 44-வது அரசிய லமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் குடியரசு தலைவர் தேச நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த யாருடைய ஆலோசனைகளை ஏற்று செயல்பட வேண்டும்?

a) மத்திய அமைச்சரவை குழு

b) கேபினட் அமைச்சர்கள்

c) அட்டார்னி ஜெனரல்

d) உச்சநீதிமன்றம்

5. கீழ்க்கண்டவற்றை பொருத்து:

A. அரசியலமைப்பின் பாகம்-II - 1. அரசின் நெறிமுறை கோட்பாடுகள்

B. அரசியலமைப்பின் பாகம்-IV - 2. மாநில அரசாங்கம்

C. அரசியலமைப்பின் பாகம்-VI - 3. சட்டத் திருத்தம்

D. அரசியலமைப்பின் பாகம்-XX - 4. குடியுரிமை

A B C D

a) 4 1 2 3

b) 1 2 3 4

c) 2 3 1 4

d) 4 3 2 1

6. கீழ்க்கண்டவற்றை பொருத்துக:-

A. 24-வது சட்டத்திருத்தம் - 1. சொத்துரிமை நீக்கம்

B. 42-வது சட்டத்திருத்தம் - 2. கட்சித்தாவல் தடை சட்டம்

C. 44-வது சட்டத்திருத்தம் - 3. அடிப்படை உரிமைகள்

D. 52-வது சட்டத்திருத்தம் - 4. அடிப்படை உரிமைகள் மீதான பாராளுமன்றத்தின் அதிகாரம்

A B C D

a) 4 1 2 3

b) 1 2 3 4

c) 4 3 1 2

d) 4 3 2 1

7. கட்சி தாவல் தடை சட்டம் எந்த ஆண்டு இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது?

a) 1985 b) 1989 c) 2002 d) 2006

8. பின்வருவனவற்றுள் எது தேச நெருக்கடி நிலையை கொண்டுவருவதற்கு ஏற்ற காரணமாக இல்லை?

a) போர் b) வெளிநாட்டு ஆக்கிரமிப்பு

c) ஆயுத கலவரம் d)உள்நாட்டு குழப்பம்

9. இந்திய அரசியலமைப்பில் எந்த பகுதி யில் தேர்தல் ஆணையம் உள்ளது?

a) பாகம்-III b)பாகம்-XV

c) பாகம்-XX d)பாகம்-XXII

10. சோசலிஷ மற்றும் மதச்சார்பற்ற என்ற 2 வார்த்தைகள் இந்திய அரசியலமைப் பின் முகவுரையில் எந்த சட்டத்திருத்தம் மூலம் சேர்க்கப்பட்டது?

a) 42-வது சட்டத்திருத்தம்

b) 24-வது சட்டத்திருத்தம்

c) 44-வது சட்டத்திருத்தம்

d) இவற்றில் எதுவும் இல்லை

11. கீழ்க்கண்டவற்றில் அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெறாத மொழி எது?

a)மைதிலி b)டோக்ரி c)துளு d)சாந்தலி

12. இந்திய அரசியலமைப்பில் உள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் எதனை வழங்குகிறது?

a) அரசியல் ஜனநாயகம்

b) சமூக ஜனநாயகம்

c) சமூக மற்றும் பொருளாதார ஜனநாயகம்

d) இவற்றில் எதுவுமில்லை

13. இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா எந்த ஆண்டு முதல் வழங்கப் படுகிறது?

a)1947 b)1954 c)1952 d)1953

14. கீழ்க்கண்டவர்களில் யார் மாநில அரசாங்கத்தின் ஒரே பிரதிநிதியாக மாவட்டத்தில் இருக்கிறார்?

a) ஜில்லா பரிஷத் தலைவர்

b) அந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்

c) கோட்ட ஆணையர்

d) மாவட்ட ஆட்சியர்

15. பாராளுமன்றம் என்பது

a) கீழ்சபை மற்றும் மேல்சபை

b) ஜனாதிபதி, கீழ்சபை மற்றும் மேல்சபை

c) கீழ்சபை, மத்திய அமைச்சரவை மற்றும் மேல்சபை

d) கீழ்சபை, மேல்சபை மற்றும் துணை ஜனாதிபதி

16. ஒரு மாநிலத்தின் உண்மையான ஆட்சித் துறை அதிகாரம் யாரிடம் உள்ளது?

a) ஆளுநர்

b) சபாநாயகர்

c) முதல்-அமைச்சர்

d) முதல்-அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை

17. இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளரை (Comptroller and Auditor General of India) நியமிப்பவர் யார்?

a) ஜனாதிபதி b) துணை ஜனாதிபதி

c) மேல்சபை d) கீழ்சபை

18. கீழ்க்கண்டவற்றில் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை எவை?

1. குடியரசுத் தலைவர் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க மாட்டார்

2. பாராளுமன்றம் என்பது குடியரசுத் தலைவர் மற்றும் இரு அவைகளையும் கொண்டது

பின்வரும் வரிசையில் சரியான விடையை தேர்வுசெய்

a) இரண்டுமில்லை b)இரண்டும்

c) ஒன்று மட்டும் d)இரண்டு மட்டும்

19. அரசியலமைப்பு சட்ட முகப்புரையில் கொடுக்கப்பட்டுள்ள அரசியல் அமைப் பின் நோக்கங்கள் எவை?

a) அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமதர்மம், சகோதரத்துவம்

b) அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சகோதரத்துவம்

c) அனைவருக்கும் நீதி, சமதர்மம், சகோ தரத்துவம் d)இவற்றில் எதுவுமில்லை

20. உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?

a) அன்னா சாண்டி

b) விஜயலட்சுமி பண்டிட்

c) இந்திரா காந்தி

d) பாத்திமா பீவி

21. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு?

a)1950 b)1946 c)1948 d)1947

22. பாராளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தை தலைமை ஏற்று நடத்துபவர் யார்?

a) ஜனாதிபதி

b) துணை ஜனாதிபதி

c) மக்களவை சபாநாயகர்

d) பிரதமர்

23. மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த பரிந்துரை செய்யும் விதி?

a) விதி 354 b) விதி 355

c) விதி 356 d) விதி 357

24. அரசியலமைப்பின் எந்த விதி ஜனாதி பதிக்கு மக்களவையை கலைப்பதற்கு அதிகாரம் அளித்துள்ளது?

a) விதி 85 b) விதி 75

c) விதி 74 d) விதி 88

25. 1953-ல் மாநில மறுசீராய்வு குழுவின் தலைவராக இருந்தவர் யார்?

a) கே.எம்.பணிக்கர் b) எச்.என்.ஹன்ஸ்ரு

c) பைசல் அலி d) ஜவஹர்லால் நேரு

26. 99-வது சட்டத்திருத்தம் எதோடு தொடர்புடையது?

a) தேசிய நீதித்துறை நியமன ஆணையம்

b) இந்தியா - வங்கதேச எல்லை உடன்படிக்கை

c) ஷரத்து 371 d) ஷரத்து 312

27. ஆளுநர் அவசர சட்டம் இயற்று வதற்கான அதிகாரம் எந்த ஷரத்தில் உள்ளது?

a) ஷரத்து 123 b) ஷரத்து 213

c) ஷரத்து 152 d) இவை எதுவுமில்லை

28. கீழ் உள்ளவற்றில் எது உச்ச நீதி மன்றத்தின் அசல் அதிகார வரம்புக்கு உட்பட்டது?

1. மாநிலங்களுக்கு இடையேயான நீர்பிரச்சினை

2. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரச்சினை

a) 1 மற்றும் 2 b) 1 மட்டும்

c) 2 மட்டும் d) இவை ஏதுமில்லை

29. மேலவை (Bicameral Legislature) உள்ள மாநிலங்கள் எவை?

1. மகாராஷ்டிரா 2. பீகார்

3. உத்தரப் பிரதேசம் 4. ஒடிசா

5. மத்தியப் பிரதேசம்

a) 1,2,3 மட்டும் b) 1,2,4 மட்டும்

c) 1,2,5 மட்டும் d) 3,4,5 மட்டும்

30. பின்வரும் அமைச்சகங்களில் எந்த அமைச்சகம் சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்புக்கு பொறுப்பு?

1. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

2. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்

3. சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம்

4. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

31. கீழ்க்கண்டவற்றுள் எவை மாநிலங் களுக்கான அதிகார பட்டியலில் உள்ளன?

1. பொது ஒழுங்கு 2. விவசாயம்

3. பந்தய சூதாட்டம் 4. உயர்நீதி்மன்ற அமைப்பு

a) 1,2,3 மட்டும் b) 1,2,3,4 மட்டும்

c) 1,2 மட்டும் d) 1,3,4 மட்டும்

விடைகள்:

1.c 2.c 3.d 4.a 5.a 6.c 7.a 8.d 9.b 10.a 11.c 12.c 13.b 14.d 15.b 16.c 17.a 18.b 19.a 20.d 21.b 22.c 23.c 24.a 25.c 26.a 27.b 28.c 29.a 30.b 31.a

(திருத்தம்:

செப்.2-ம் தேதி இதழில் வெளியான கேள்வி எண் 29-க்கான விடை மாநில ஆளுநர் ஆகும்.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x