Published : 16 Nov 2014 01:50 PM
Last Updated : 16 Nov 2014 01:50 PM

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 19

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்

546. இந்தியாவின் முதல் பத்திரிகை எது, எப்போது வெளிவந்தது?

547. முதன்முதலில் உருவம் பதித்த நாணயத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் யார்?

548. பிரம்மோஸ் ஏவுகணைக்கு அப்பெயரை சூட்டியவர் யார்?

549. இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருது எது?

550. ஐதராபாத் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

551. மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா விருது பெற்ற இரு தலைவர்கள் யார் ?

552. ஒரு யுகம் என்பது எத்தனை ஆண்டுகள்?

553. ஆசியாவின் இத்தாலி என அழைக்கப்படும் நாடு எது?

554. சர்வதேச கடல் அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது?

555. பாரத ரத்னா, பத்மவிபூஷன் என்ற இரு விருதுகளையும் பெற்றவர் யார்?

556. கடலும் கடல்சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

557. தருமபுரி மாவட்டத்தின் சங்க கால பெயர் என்ன?

558. ஒரு யூனிட் என்பது எத்தனை மில்லி லிட்டர்?

559. இந்திய வானொலியின் பழைய பெயர் என்ன?

560. வங்கதேசத்தின் பிரதமர் யார்?

561. ஜவ்வரிசி அதிகமாக உற்பத்தி செய்யும் மாவட்டம் எது?

562. ஒலிம்பிக் போட்டி எப்போது தொடங்கியது?

563. வெங்காயம் அதிகம் விளையும் மாநிலம் எது

564. பாகிஸ்தான் நாட்டின் தேசிய மலர் எது?

565. இந்தியாவின் முதல் ஏவுகணையின் பெயர் என்ன?

566. மனித உடலில் எளிதில் உடையாத எலும்பு எது?

567. மனிதன் உபயோகித்த முதல் உலோகம் எது?

568. "டங்சா" என்ற பழங்குடியினர் எந்த மாநிலத்தில் வாழ்கிறார்கள்?

569. "எம்பயர் நகரம்" என அழைக்கப்படும் நகரம் எது?

570. இந்தியாவில் புதிதாக ஒரு மாநிலத்தை உருவாக்கிட திருத்தம் செய்யும் அரசியல் நிர்ணய சட்டத்தின் அட்டவணை எது?

571. போஸ்டல் இண்டக்ஸ் எண் எனப்படும் பின்கோடு முறை எப்போது தொடங்கப்பட்டது?

572. குருதேவ் என அழைக்கப்பட்டவர் யார்?

573. பெரிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விருது எது?

574. தெலங்கானா தனிமாநிலம் அமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவின் தலைவர் யார்?

575. அடிப்படை உரிமைகள், இந்திய அரசியலமைப்பின் மனசாட்சி என வர்ணித்தவர் யார்?

576. சேர்வலாறு அணைக்கட்டு எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

577. இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

578. அப்பள தயாரிப்புக்கு பெயர்பெற்ற இடம் எது?

579. தமிழ்நாட்டின் சர் வால்டர் ஸ்காட் என அழைக்கப்பட்டவர் யார்?

580. இந்தியாவில் நீளமான கோயில் பிரகாரம் எங்குள்ளது?

விடைகள்:

546. பெங்கால் கெஜட், 29.1.1769 547. மாவீரன் அலெக்சாண்டர் 548. டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் 549. சாகித்திய அகாடமி 550. மியூசி நதி 551. காமராஜர் (1976), எம்ஜிஆர் (1988) 552. 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள் 553. இந்தியா 554. 1948 555. டாக்டர் ஜாகீர் உசேன் 556. நெய்தல் 557. தகடூர் 558. 350 மி.லி. 559. இந்தியன் பிராட்காஸ்டிங் சர்வீசஸ் 560. ஷேக் அசீனா 561. சேலம் மாவட்டம் 562. 1901 563. மகாராஷ்டிரம் 564. மல்லிகை 565. அக்னி 566. தாடை எலும்பு 567. செம்பு 568. அருணாச்சலப் பிரதேசம் 569. நியூயார்க் 570. முதலாம் அட்டவணை 571. 15.8.1972 572. ரவீந்திரநாத் தாகூர் 573. மகாரத்னா 574. ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா 575. ஜவஹர்லால் நேரு 576. திருநெல்வேலி மாவட்டம் 577. கிளை வங்கி முறை 578. கல்லிடைக்குறிச்சி 579. கல்கி 580. ராமேசுவரம் கோவில், 14,000 அடி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x