Last Updated : 09 May, 2017 10:39 AM

 

Published : 09 May 2017 10:39 AM
Last Updated : 09 May 2017 10:39 AM

ஆங்கிலம் அறிவோமே 159: மனம் உடைந்துவிடக் கூடாது!

கேட்டாரே ஒரு கேள்வி

“ஆங்கிலம் அறிவோமே பகுதியில் அவ்வப்போது வார்த்தைகளில் சரியான spellings-ஐக் குறிப்பிடுகிறீர்கள். இன்றைய கணினி யுகத்தில் நாம் கணினியைப் பயன்படுத்தும்போது spell checker வசதி இருக்கிறது. எனவே ஒரு வார்த்தையில் தவறான எழுத்தை நாம் பயன்படுத்தினால் அதன் கீ ழே ஒரு சிவப்புக் கோடு தோன்றிவிடுகிறது. அந்த வார்த்தையின் மீது கிளி செய்தால் அந்த வார்த்தையின் சரியான spelling திரையில் தோன்றுகிறது. பிறகு எதற்காக நாம் சரியான spellings-ஐ நினைவு கொள்ள வேண்டும்?”

****************

நண்பரே, தவறான எழுத்தைப் பயன்படுத்தும்போது கணினி சில சமயம் மாற்று எழுத்துகளைக் கொண்ட நான்கைந்து வார்த்தைகளைக் குறிப்பிடலாம். அவற்றில் எதை நீங்கள் அந்த இடத்தில் பயன்படுத்த வே ண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே.

தவிர சில வார்த்தைகளை ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பயன்படுத்தினால் spellchecker உங்களுக்கு உதவிக்கு வராது. அதே சமயம் அர்த்தமும் விபரீதமாக மாறிவிடலாம்.

Marital என்பதற்குப் பதிலாக Martial என்று நீங்கள் தவறாகத் தட்டச்சு செய்துவிட்டால் (இரண்டு வார்த்தைகளுமே ஆங்கிலத்தில் இருப்பதால்) சிவப்பு அடிக்கோடு தோன்றாது. ஆனால் அர்த்தம் மிகவும் மாறிவிடுமே! Martial arts என்றால் தற்காப்புக் கலைகள். Marital என்றால் திருமணம் தொடர்பான என்று பொருள். மாற்றிப் பயன்படுத்தலாமா? ‘All is fair in love and war’ என்று சமாதானப்படுத்திக் கொள்ள முடியமா?’.

பேட்டை தாதா ஒருவர் “Let us meet him” என்று தகவல் அனுப்புவதற்குப் பதிலாக ஒரே ஒரு எழுத்துப் பிழையோடு அந்தத் தகவலை அனுப்பினால் (Let us meat him) ஒரு கொலை நடந்து விடவும் வாய்ப்பு உண்டே! (Meat என்ற வார்த்தை verbஆகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பது வேறு விஷயம்).

சந்தேகப் புத்தி கொண்ட (sceptic) நண்பர் என்பதற்காக அவரை Septic என்று குறிப்பிட்டு அவரை சாக்கடையோடு தொடர்புபடுத்தலாமா?

****************

Olympics என்பதை எப்போது பயன்படுத்த வேண்டும், Olympic என்பதை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதில் குழப்பம் வருகிறதே?

Olympics என்பது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலக அளவிலான பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகள். Olympics என்பது noun.

Olympic என்பது adjective. Olympics தொடர்பான என்று பொருள். கீழே உள்ள வாக்கியங்களைக் கவனியுங்கள்.

Olympics is conducted every four years.

Olympic games are conducted every four years.

இன்னொரு நண்பர் Virus, Viral ஆகியவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கேட்டிருக்கிறார். Olympics-Olympic அடிப்படையே இதற்கும் பொருந்தும்.

Virus என்பது நோய்களை உருவாக்கும் நுண்ணுயிர். Noun.

Viral என்றால் virus தொடர்பான. Viral fever, viral infection என்பதுபோல.

Viral videos என்றால் அந்த வீடியோக்கள் (virus நோய் தொற்று போல) வெகு வேகமாகப் பரப்பப்டுகின்றன என்று பொருள். இதைத்தான் ‘ச மூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது’ என்று குறிப்பிடுகிறோம். அதற்காக, “அந்த வீடியோ வைரஸாக பரவியது” என்று எழுதிவிடக்கூடாது.

****************

“Dish என்பது உணவா? பாத்திரமா?” இப்படிக் கேட்கிறார் ஒரு வாசகர்.

குறிப்பிட்ட விதத்தில் சமைக்கப்பட்ட ஓர் உணவையும் dish என்பதுண்டு. ஆனால் வட்டமாகவும் கொஞ்சம் குழிவாகவும் இருந்து உணவுப் பொருள்களைக் கையாளப் பயன்படுத்தப்படும் பாத்திரங்களைத்தான் பெரும்பாலும் dish என்கிறார்கள். Dish-washer என்பது நினைவுக்கு வந்திருக்குமே.

சமையலறை தொடர்பான வேறொரு வாசகரின் கேள்வியையும் இங்கே பார்த்துவிடலாம். ‘Crockery என்றால் பீங்கான் என்று பொருளா?’

அல்ல. ஒரு உணவு மேஜையில் வைக்கப்படக்கூடிய கோப்பைகள், தட்டுகள், உணவுப் பாத்திரங்கள் போன்றவற்றைத்தான் crockery என்கிறார்கள். (கவனிக்கவும். Crockeries என்பது இதன் பன்மை அல்ல. அப்படியொரு வார்த்தை கிடையாது). பீங்கான் என்றால் ceramic.

****************

“எளிதில் உடைந்துவிடக்கூடிய ஒன்றை breakable என்ற ஒரே வார்த்தையில்தான் விவரிக்க முடியுமா? மாற்று வார்த்தைகள் உண்டா?’’.

மேற்படி கேள்விகளிலேயே ஒரு தவறு இருக்கிறது என்றால் கேள்வியின் நாயகரான வாசகர் மனம் உடைந்து விடக்கூடாது. Breakable என்றால் எளிதில் உடையக்கூடியதுதான் என்பதல்ல. கொஞ்சம் கஷ்டப்பட்டு உடைக்கக் கூடியதையும்கூட breakable என்று சொல்லலாம். Non-breakable என்றால் உடைக்க முடியாதது.

மிகவும் எளிதில் உடையக்கூடிய ஒன்றைக் குறிக்க brittle என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

Her bones became fragile and brittle என்றும்கூடக் கூறலாம்.

Breakable என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற வேண்டுதல் ஏதாவது உங்களுக்கு இருந்தால் ‘easily breakable’ என்று குறிப்பிடுவதன் மூலம் எளிதில் உடைத்துவிடக்கூடிய என்ற அர்த்தத்தை நீங்கள் கொண்டுவரலாம்.

****************

“எனக்கு நீரிழிவு நோய் உண்டு. ரத்தச் சர்க்கரை அளவை fasting, P.P. என்று இருவிதமாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. Fasting என்பது எனக்குப் புரிகிறது. அதாவது வெற்று வயிறாக இருக்கையில் ரத்தத்தை எடுத்துச் சோதிக்கிறார்கள். சாப்பிட்டுவிட்டு இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு ரத்தத்தை எடுத்துச் சோதனை செய்வதை P.P. என்கிறார்கள். இந்த P.P.-க்கான விளக்கத்தை Lab உதவியாளரிடம் கே ட்டேன். அவருக்குப் பதில் தெரியவில்லை. நீங்கள் சொல்ல முடியுமா?”

P.P. என்பது Post Prandial என்பதன் சுருக்கம். Post என்றால் லத் தீன் மொழியில் ‘பிறகு’ என்று அர்த்தம். அதே மொழியில் ‘Prandium’ என்றால் உணவு என்று அர்த்தம். ஆக Post Prandial என்றால் உணவு உட்கொண்டதற்குப் பிற்பட்ட காலகட்டம் தொடர்பானது என்று பொருள்.

போட்டியில் கேட்டுவிட்டால்?

Call the finance ________

a) budget

b) development

c) balance sheet

d) manager

e) statement

‘நிதி வளர்ச்சியைக் கூப்பிடு’ என்று இருக்க முடியாது. எனவே development என்பது பொருந்தாத வார்த்தை ஆகிவிடுகிறது.

அதேபோல் budget, balance sheet, statement போன்றவை உயிரற்றவை. எனவே இவற்றில் ஏதாவது ஒன்று இருக்க வே ண்டுமென்றால் வாக்கியம் call for என்று தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால் call என்று மட்டுமே தொடங்கியிருப்பதால் நிதி மேலாண்மை அதிகாரியைக் கூப்பிடு என்ற பொருள் வரும் வகையில் அமைந்த manager என்ற வார்த்தைதான் இங்குப் பொருந்துகிறது.

Call the Finance Manager.



சிப்ஸ்

> Cliff என்பதும், hill என்பதும் வேறு வேறா?

Hill என்றால் குன்று. Cliff என்றால் கிட்டத்தட்டச் செங்குத்தாக (வெட்டப்பட்டது போல்) அமைந்த மலைப்பகுதி. இது பெரும்பாலும் நதி, கடல் போன்றவற்றின் அருகில் அமைந்திருக்கும்.

> விவாகரத்துக்குப் பிறகு சில சமயங்களில் மனைவியும் கணவனுக்கு ஜீவனாம்சம் தர நீதிமன்றம் உத்தரவிடுகிறதே. அதையும் Alms என்றே குறிப்பிடலாமா?

அது alms அல்ல alimony. ஜீவனாம்சம் என்ற பொதுவான வார்த்தை போலத்தான் alimony என்பதும். Alms என்றால் ஏழைகளுக்கு அளிக்கப்படும் பணம் அல்லது உணவு.

> Replete என்றால் என்ன?

அதிகமாகக் கொண்ட. The drama plot is replete with melodramatic deaths. The grammar book is replete with examples.

> Tweak செய்வது என்றால் என்ன?

சிறிய விதத்தில் மாற்றிக்கொள்வது என்று பொருள். முறுக்குவதையும் tweak என்பதுண்டு. The teacher tweaked the boy’s ear.

> Gimme என்றால்?

Give me.

> Pretty, petty என்ன வித்தியாசம்?

அழகான, அற்பமான.



- தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x