Published : 03 Apr 2014 01:40 PM
Last Updated : 03 Apr 2014 01:40 PM

அந்த நாள் ஞாபகம்: கஜகஸ்தான் அதிபர் 95.5 % வாக்குகளை பெற்ற நாள்

2011, ஏப்ரல் 3

கஜகஸ்தான் அதிபராக இருப்பவர் நுர்சுல்தான் நசர்பாயெவ்.அவர் நாடாளுமன்ற தேர்தலில் 95.5 சதவீத வாக்குகளை பெற்ற நாள் இன்று. கஜகஸ்தான் சோவியத் யூனியனில் இருந்த நாடு. தற்போதைய அதன் அதிபர் நுர்சுல்தான் நசர்பாயெவ்வும் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளராக1989 முதல் 1991 வரை இருந்தவர்தான். கஜகஸ்தான் சோவியத்தின் தலைவராகவும் 1990ல் அவர் இருந்தார்.

1991ல் சோவியத் யூனியன் தகர்ந்து போனது. சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சியை அதன் பொதுச்செயலாளராக இருந்த கோர்ப்பசேவே கலைத்துவிட்டார்.அதனால் 1962லிருந்து 1991வரை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துவிட்ட நுர்சுல்தான் அரசியல் கட்சி இல்லாதவராகி விட்டார்.

எனவே 1999 வரை எட்டாண்டு காலம் அவர் சுயேச்சையான அரசியல்வாதியாக இருந்தார்.பிறகு நாட்டில் உருவான பலவகையான கட்சிகளை ஒன்றாக திரட்டினார். அதற்கு நுர்ஒடான் என பெயர் வைத்தார். தற்போது அதன் தலைவராக அவர் இருக்கிறார். 2005 தேர்தலில் அவர் 91.2% வாக்குகளை பெற்றார்.

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் நாட்டின் அதிபராக இருக்கலாம் என 2007ல் அவர் அரசியல் சாசனத்தை திருத்திக் கொண்டார். கஜகஸ்தான் தேசபக்தர்கள் கட்சியை சேர்ந்த கனி காசிமோவ், கஜகஸ்தான் கம்யூனிஸ்ட் மக்கள் கட்சியை சேர்ந்த ழாம்பில் அக்மெட்பி கோவ்,சுற்றுச்சூழல்வாதி மேல்ஸ் எலுஷிஷோவ் ஆகியோர் போட்டியிட்டு தோற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x