

நாடு செழுமைபெற வேண்டு மானால், புதிய புதிய தொழில்நுட்பங் களை பல்கலைக் கழகங்கள் கண்டு பிடிக்க வேண்டும் என்று ஆளுநர் ரோசய்யா வலியுறுத்தி உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய உற்பத்தி யாளர்கள் சங்கம் நடத்தும் ‘டெக்னோ 2014’ தொழில்நுட்ப கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் ஆளுநர் ரோசய்யா வெள்ளிக் கிழமை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது:
கல்விதான் முன்னேற்றத்துக் கான முக்கிய வழியாக இருக்கிறது. ஜனநாயகத்துக்கு சிறந்த அடித்தள மாகவும் கல்வி இருக்கிறது. நாடு செழுமை பெற, புதிய புதிய தொழில் நுட்பங்களை பல்கலைக் கழகங்கள் கண்டுபிடிக்க வேண்டும். மேலும், தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் பொறியியல் படித்து தேர்ச்சி பெறுகின்றனர். இதில் 2.5 லட்சம் திட்டங்கள் (புராஜக்ட்கள்) வெளியே வருகின்றன. மாணவர் கள் மத்தியில் புதிய தொழில்நுட்பத் திறன் அதிகரித்து வருகிறது. இந்தி யா ஓர் அறிவுசார் நாடாக உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சத்யா நாதெள்ள நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு நடக்கவுள்ள கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, பொறியியல் மாணவர்கள் சுயமாக தொழில் தொடங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ஆளுநர் பேசினார்.
அகில இந்திய உற்பத்தியா ளர்கள் சங்க தமிழக பிரிவு தலைவர் எஸ்.சீனிவாசன் கூறியதாவது:
பொறியியல் படிக்கும் மாணவர் களை புதிய தொழில் முனைவோராக உருவாக்கவும், தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடுத்தவும் கடந்த 3 ஆண்டுகளாக தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகை யில் இந்த ஆண்டும் 2 நாட்களுக்கு (21, 22-ம் தேதி) நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு நாடுமுழுவதும் இருந்து 10 ஆயிரம் மாணவர்கள் 4 ஆயிரம் படைப்புகளை அனுப்பி யுள்ளனர். இதில், சிறந்த 70 திட்டங்கள் (புராஜக்ட்) தேர்வு செய்யப்பட்டு, கருத்தரங்கில் விளக்கவுரை அளிக்கப்படும். இறுதியாக 17 திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று மாலையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தரங்கில் அண்ணா பல் கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ராஜாராம், அகில இந்திய உற்பத்தி யாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.